50) ஆண்கள் யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி : 

ஆண்கள் யாரை யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது?

பதில் : 

  1. உங்கள் அன்னையர்,
  2. உங்கள் புதல்வியர்,
  3. உங்கள் சகோதரிகள்,
  4. உங்கள் தந்தையரின் சகோதரிகள்,
  5. உங்கள் அன்னையின் சகோதரிகள்,
  6. சகோதரனின் புதல்விகள்,
  7. சகோதரியின் புதல்விகள்,
  8. உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர்,
  9. பால்குடிச் சகோதரிகள்,
  10. உங்கள் மனைவியரின் அன்னையர்,
  11. நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை.
  12. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்).
  13. இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:24)