49) வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கத் தடை
48) வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கத் தடை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவைமட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். ‘ஆம்’ என்றார்.
அறிவிப்பவர் : முஹம்மத் இப்னு அப்பாத்
வெள்ளிக்கிழமைக்கு அன்று மட்டும் நோன்பு நோற்கத் தடை. என்றாலும் முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாள், சேர்த்து வைத்துக் கொள்ள அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயாகம் (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். இதை பின் வரும் ஹதீஸ் மூலம் விளங்கி கொள்ளலாம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!’
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)