42) ஈஸா (அலை) செய்த அற்புதம் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
ஈஸா (அலை) அவர்கள் செய்த அற்புதம் என்ன?
பதில் :
- மண்ணால் பறவையை படைத்தார்
- குருடர்களை குணமாக்கினார்
- குஷ்ட நோயை குணப்படுத்தினார்
- இறந்தவர்களை உயிர்பித்தார்
- வீட்டில் மறைமுகமாக சேமித்த பொருட்களை வெளிப்படுத்தினார்
- நீங்கள் சாப்பிட்டுவிட்டு வந்ததையும் கூறுவார்
ஆதாரம் :
இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் அனுமதியின்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் அனுமதியின்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்)