46) நேர்த்திக்கடன் செய்வதற்கு வந்துள்ள தடை
நூல்கள்:
நபிகளார் விதித்த தடைகள்
46) நேர்த்திக்கடன் செய்வதற்கு வந்துள்ள தடையும்
அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது என்பதும்.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا يَنْهَانَا عَنِ النَّذْرِ، وَيَقُولُ: «إِنَّهُ لَا يَرُدُّ شَيْئًا، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الشَّحِيحِ»
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் “நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)