39) போதைப் பொருட்கள்
போதைப் பொருட்கள்
போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூமுஸா அல்அஷ்அரீ (ரலி)
விளக்கம்:
இஸ்லாம் மதுவைத் தடை செய்துள்ளது. மது அருந்த கூடாது என்றும் இது ஷைத்தானின் காரியம் என்றும் எச்சரிக்கை செய்கிறது.
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
நவீன உலகில் மக்களைக் கெடுப்பதற்கு என ஏராளமான பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் போதைப் பொருட்கள் முக்கிய இடத்தை பெறுகின்றன. போதைக்கு அடிமையாக்கி, பலரின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்கியுள்ளனர்.
போதைப் பொருட்கள் இன்று பல பெயர்களில் சந்தையில் உலா வருகின்றன. இவற்றில் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். எந்தப் பெபரில் வந்தாலும் அவற்றில் போதை இருக்குமானால் கண்டிப்பாக அவற்றை சாப்பிடக் கூடாது அதிகம் சாட்பிட்டால் தான் போதை வரும் என்றிருந்தால் அதைக் கொஞ்சம் கூட சாப்பிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (திர்மிதீ: 1788) எனவே எந்தப் பொருள் போதை தந்தாலும் அவற்றைச் சாப்பிடுவது ஹராமாகும்.