37) ஆட்சிக்கு ஆசைப்படாதே
ஆட்சிக்கு ஆசைப்படாதே
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
அல்லாஹ்வின் தாதர் (ஸல்) அவர்கள், “ஆட்சிப் பொறுப்பை நீயாகக் கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ விடப்படுவாய் (இறை உதவி கிட்டாது)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி)
விளக்கம்:
பொருளாதாரத்தை ஈட்ட நல்ல வழியாக இன்று அரசியல் அதிகாரத்தைப் பலர் நம்பி இருக்கின்றனர். இதனால் தான் சிறிய கவுன்சிலர் பதவிக்குக் கூட பல இலட்சங்களை வாரி இறைக்கின்றனர் இது போன்ற பொறுப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்தப் பொறுப்பு எதற்காக வழங்கப்படுகிறதோ அதைச் சரிவர நிறைவேற்றாதவர் மறுமையில் குற்றவாளியாக நிறுத்தப்படுவார். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்தப் பொறுப்பை அமானிதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த பொறுப்புகளை நாமாக தேடிப் பெற்றுக் கொண்டால் இறை உதவி இல்லாமல் நாம் தனித்து விடப்படுவோம். நமது திறமையையும் நேர்மையையும் பார்த்து மக்களாகக் கொடுத்தால் இறை உதவி நிச்சயம் நமக்குக் கிடைக்கும். பணம் கிடைக்கிறது. அதிகாரம் கிடைக்கிறது என்பதற்காக, பதவிக்குப் போட்டி போட்டு, பணத்தைச் சம்பாதிப்பதையே குறிக்கோளாக இருந்தால் அவர் அந்தப் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி மக்களுக்கு மோசடி செய்தார் என்பதால் அவர் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.