30) அல்லாஹ் இறந்தோரை எப்படி உயிர்பிக்கிறான்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
36) அல்லாஹ் இறந்தோரை எப்படி உயிர்பிக்கிறான்?
கேள்வி :
அல்லாஹ் இறந்தோரை எப்படி உயிர்பிக்கிறான் என்பதை இப்ராஹீம் நபி அறிந்த நிகழ்ச்சி என்ன?
பதில் :
260. “என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டியபோது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே” என்றார். “நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக” என்று (இறைவன்) கூறினான்.