35) நபிகளார் விதித்த தடைகள்
நூல்கள்:
நபிகளார் விதித்த தடைகள்
35) நபிகளார் விதித்த தடைகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المُلاَمَسَةِ وَالمُنَابَذَةِ، وَعَنْ صَلاَتَيْنِ: بَعْدَ الفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغِيبَ، وَأَنْ يَحْتَبِيَ بِالثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரம் முறைகளுக்குத் தடை விதித்தார்கள். ஃபஜ்ருக்குப் பிறகு சூரியன் உயரும் வரை தொழுவது, அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரை தொழுவது ஆகிய இரண்டு (நஃபில்) தொழுகைக்கும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக்கொண்டு இரண்டு முழங்கால்களையும் நட்டு வைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்வதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள். ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில்விட்டு விடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ) தடை விதித்தார்கள்.