34) 81 – அத்தக்வீர் (சுருட்டுதல்)
81 – அத்தக்வீர் (சுருட்டுதல்)
பொருள் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1.இ(D)தஷ் ஷம்சு (K)குவ்விர(TH)த்
2.வஇ(D)தன் நூஜுமுன் (K)க(D)தர(TH)த்
3.வஇ(D)தல் ஜிபாலு சுய்யிர(TH)த்
4.வஇ(D)தல் இஷாரு உ(TH)த்தில(TH)த்
5.வஇ(D)தல் உஹூஷு ஹுஷிர(TH)த்
6.வஇ(D)தல் பிஹாரு சுஜ்ஜிர(TH)த்
7.வஇ(D)தன் நுஃபூஸு (Z)சுவ்விஜத்
8.வஇ(D)தல் மவ்ஊ(D)த(TH)து சுயில(TH)த்
9.பிஅய்யி (D)தம்பின் (Q)கு(TH)தில(TH)த்
10.வஇ(D)தஸ் ஸுஹுஃபு நுஷிர(TH)த்
11.வஇ(D)தஸ் ஸமாவு குஷி(TH)த(TH)த்
12.வஇ(D)தல் ஜஹீமு ஸுஃஇர(TH)த்
13.வஇ(D)தல் ஜன்ன(TH)த்து உ(Z)ஸ்லிஃப(TH)த்
14.அலிம(TH)த் நஃப்ஸும் மா அஹ்ளர(TH)த்
15.ஃபலா உ(Q)க்ஸிமு பில் (KH)ஹுன்னஸ்
16.அல்ஜவாரில் (K)குன்னஸ்
17.வல்லைலி இ(D)தா அஸ்அஸ்
18.வஸ்ஸுபுஹி இ(D)தா (TH)தநஃப்பஸ்
19.இன்னஹு ல(Q)கவ்லு ரசூலின் கரீம்
20.தீ(Q)குவ்வ(TH)த்தின் இன்(D)த (D)தில் அர்ஷி ம(K)கீன்
21.மு(TH)தாஇன் சம்ம அமீன்
22.வமா ஸாஹிபு(K)கும் பிமஜ்னூன்
23.வல(Q)க(D)த் ரஆஹு பில்உஃபு(Q)கில் முபீன்
24.வமா ஹுவ அலல் (GH)ஃகைபி பிளநீன்
25.வமா ஹுவ பி(Q)கவ்லி ஷை(TH)த்தானிர் ரஜீம்
26.ஃபஅய்ன (TH)த(D)த்ஹபூன்
27.இன்ஹுவ இல்லா (D)திக்ரூல் லில்ஆலமீன்
28.லிமன்ஷாஅ மின்(K)கும் அய்யஸ்(TH)த(Q)கீம்
29.வமா (TH)ஷாஊன இல்லா அய்யஷா அல்லாஹு ரப்புல் ஆலமீன்.
பொருள் :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. சூரியன் சுருட்டப்படும் போது,
2. நட்சத்திரங்கள் உதிரும் போது,
3. மலைகள் பெயர்க்கப்படும் போது,
4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது,
5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது,
6. கடல்கள் தீ மூட்டப்படும் போது,
7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது,
8, 9. என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,
10. ஏடுகள் விரிக்கப்படும் போது,
11. வானம் அகற்றப்படும் போது,
12. நரகம் கொளுத்தப்படும் போது,
13. சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும் போது,
14. ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான்.
15, 16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறைகின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
17. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக
18. தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!
19. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்.
20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.
21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.
22. உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.
23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.
24. அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.
25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.
26. எங்கே செல்கிறீர்கள்?
27, 28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.
29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.
81. AT – TAKWIR – ROLL UP
In the name of God, the Gracious, the Merciful.
1. When the sun is rolled up.
2. When the stars are dimmed.
3. When the mountains are set in motion.
4. When the relationships are suspended.
5. When the beasts are gathered.
6. When the oceans are set aflame.
7. When the souls are paired.
8. When the girl, buried alive, is asked:
9. For what crime was she killed?
10. When the records are made public.
11. When the sky is peeled away.
12. When the Fire is set ablaze.
13. When Paradise is brought near.
14. Each soul will know what it has readied.
15. I swear by the galaxies.
16. Precisely running their courses.
17. And by the night as it recedes.
18. And by the morn as it breathes.
19. This is the speech of a noble messenger.
20. Endowed with power, eminent with the Lord of the Throne.
21. Obeyed and honest.
22. Your friend is not possessed.
23. He saw him on the luminous horizon.
24. And He does not withhold knowledge of the Unseen.
25. And it is not the word of an accursed devil.
26. So where are you heading?
27. It is only a Reminder to all mankind.
28. To whoever of you wills to go straight.
29. But you cannot will, unless God wills-The Lord of the Worlds.
Al’Quran : 81 : 01-29