34) இறந்தவர்களை ஏசாதீர்
நூல்கள்:
நாவை பேணுவோம்
இறந்தவர்களை ஏசாதீர்
இறந்தவர்களை ஏசும் மிக மோசமான குணம் நமது இஸ்லாமிய வட்டத்துக்குள் உலவுகின்றன. இறந்தவர்கள் மீண்டும் உயிர்ப்பெற்று வரமாட்டார் என்ற தைரியத்தில் அவர்களின் மீது துணிந்து பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். இது உடனே களையெடுக்கப்பட வேண்டிய படுமோசமான குணம் என்று நபிகளார் கூறுகின்றார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)