33) காற்றை திட்டாதீர்
நூல்கள்:
நாவை பேணுவோம்
காற்றை திட்டாதீர்
ஒரு மனிதர் நபியவர்களுடன் இருக்கும் போது காற்றை திட்டினார். அப்போது நபியவர்கள் காற்றை திட்டாதீர். ஏனெனில் அது இறைவனின் புறத்திலிருந்து) உத்தரவு இடப்பட்டிருக்கின்றது. மேலும் யார் ஒன்றை சபித்து அது அதற்கு (சாபத்திற்கு) உரியதில்லை எனில் அச்சாபம் அவர் மீதே திரும்பி விடும் என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)
மேற்கண்ட நபிமொழியில் காற்றை சபிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள். இப்போதும் கூட ஏதேனும் ஒரு சமயத்தில் மிகவும் புழுக்கமாக இருந்தால் உடனே காற்றை வசைபாடுகின்றோம். அது இறைவனின் கட்டளைப்படி செயல்படுகின்றது. அதை சபிப்பதற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் நபிகளார் தெளிவுபடுத்தியதை புரிந்து கொள்ள வேண்டும்.