32) என் எஜமான்; என் உரிமையாளர்
நூல்கள்:
நபிகளார் விதித்த தடைகள்
32) என் எஜமான்; என் உரிமையாளர்
أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ
لاَ يَقُلْ أَحَدُكُمْ: أَطْعِمْ رَبَّكَ وَضِّئْ رَبَّكَ، اسْقِ رَبَّكَ، وَلْيَقُلْ: سَيِّدِي مَوْلاَيَ، وَلاَ يَقُلْ أَحَدُكُمْ: عَبْدِي أَمَتِي، وَلْيَقُلْ: فَتَايَ وَفَتَاتِي وَغُلاَمِي
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் ‘உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொண்டு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு’ என்று கூற வேண்டாம். ‘என் எஜமான்; என் உரிமையாளர்’ என்று கூறட்டும்.
‘என் அடிமை; என் அடிமைப் பெண்’ என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். ‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்’ என்று கூறட்டும். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.