26) விளையாட்டுக்காக சத்தியம் செய்தால் அல்லாஹ் தண்டிப்பனா?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
31) விளையாட்டுக்காக சத்தியம் செய்தால் அல்லாஹ் தண்டிப்பனா?
கேள்வி :
சத்தியம் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் விளையாட்டுக்காக சத்தியம் செய்தால் அல்லாஹ் தண்டிப்பனா?
பதில் :
சத்தியம் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் விளையாட்டுக்காக சத்தியம் செய்தால் அதற்காக அல்லாஹ் தண்டிக்கமாட்டான். அது பாவமானதும் கிடையாது. பரிகாரமும் செய்ய வேண்டாம். எனினும் நம் எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் நம்மை தண்டிப்பான்.
ஆதாரம் :
225. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.