29) பரிந்துரை செய்யும் பாக்கியம்

நூல்கள்: நாவை பேணுவோம்

பரிந்துரை செய்யும் பாக்கியம்

மறுமை நாளில் இறைவனின் நாட்டப்படி அவனுடைய அனுமதியுடன் சிலர் சிலருக்கு சாட்சியம் அளிப்பார்கள். பரிந்துரை செய்வார்கள். இறைவன் நாடினால் அந்த அடியார் செய்த பரிந்துரையை ஏற்பான். இல்லையேல் நிராகரிப்பான் எனினும் பிறருக்கு பரிந்துரை செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைக்குமாயின் மிகப் பெரிய பாக்கியமே. எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துவிடாது.

இறைவனின் விருப்பத்திற்குரியவர்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அதிகமதிகம் சபிப்பவர்கள் வசை பொழிபவர்கள் ஒரு போதும் இந்த பாக்கியத்தை பெறமாட்டார்கள். இத்தகைய அரிய வாய்ப்பை நழுவ விட்ட கைசேதவான்களாக மாறிவிடுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சியமளிப்பவர்களாகவோ பரிந்துரைப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள். 

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

(முஸ்லிம்: 5064)