28) மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா?
28) மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா?
அப்துல்லாஹ் பின் அபீ நமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார்.
அவர்களில் நடுவிலிருந்தவர், “இவர்களில் சிறந்தவர்” என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், “இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்” என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில் – (உறக்க நிலையில்) – அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்: அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத் தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்: அவர்களுடைய உள்ளங்கள் உறங்கமாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.
மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தனக்கு வஹீ வருவதற்கு முன்பே அதாவது தான் நபியாவதற்கு முன்பே மிஃராஜ் பயணம் அழைத்து செல்லப்பட்டதாக மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்படுகின்றது. மிஃராஜ் பயணம் நபி (ஸல்) அவர்கள் நபியாக ஆனதன் பின்னர் தான் நடந்தது என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக முதலாவது வஹீ கொண்டு வரப்பட்ட போது தமக்கு ஏதோ நடந்துவிட்டதாக எண்ணி நபியவர்கள் அஞ்சினார்கள். நபியாக ஆவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் அழைத்து செல்லப்பட்டிருந்தால் ஜிப்ரீல் (அலை) வந்த நேரத்தில் தமக்கு ஏதோ நடந்துவிட்டதாக நினைத்து அஞ்சியிருக்க மாட்டார்கள்.
மட்டுமன்றி மேற்கண்ட ஒரு செய்தியை உண்மை என்று நாம் ஒப்புக் கொண்டால் முதல் வஹீ தொடர்பில் இடம் பெற்றுள்ள ஏராளமான செய்திகளை மறுக்கும் நிலை உருவாகிவிடும். எனவே இந்தச் செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இது தவறான செய்திதான் என்ற முடிவுக்கு வருவதே ஹதீஸ்களை புரிந்து கொள்ளும் சரியான வழிமுறையாகும்.
எதிர்வாதமும் நமது பதிலும்
இந்த செய்தியை நாம் மறுக்கும் போது சிலர் ஒரு வாதத்தை முன்வைக்கின்றார்கள்.
அதாவது குறித்த செய்தியில் இடம் பெறும் அரபி வாசகத்தைச் சரியாக புரியாத காரணத்தினால், இவர்களுக்கு அரபியில் போதிய அறிவில்லாததினால் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்த ஹதீஸை மறுக்கின்றார்கள். குறித்த அரபி வாசகத்தை சரியாகப் புரிந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
குறித்த ஹதீஸின் அரபி வாசகத்தில்
(லைலதன் உஹ்ரா) என்று இடம் பெற்றுள்ளது. லைலதன் உஹ்ரா என்றால் அடுத்த நாள் என்று அர்த்தமல்ல வேறு ஒரு நாளில் என்று தான் அர்த்தம் ஆகவே இவர்களுக்கு போதிய அரபி அறிவில்லாததினால் இதனைத் தவறாக மொழியாக்கம் செய்து விட்டார்கள்.
நமது பதில்
ஒரு வாதத்திற்காக இந்த அரபிப் புலவர்கள் சொல்வதைப் போல்
(லைலதன் உஹ்ரா) என்ற வார்த்தைக்கு வேறு ஒரு நாள் என்று பொருள் வைத்தாலும் இந்தச் செய்தி உண்மையென்று ஆகாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இடண்டாவது விஷயம் என்னவெனில் குறித்த செய்தியில் இடம் பெறும்
(லைலதன் உஹ்ரா) என்ற வார்த்தைக்கு வேறு ஒரு நாள் என்று மொழியாக்கம் செய்வது தான் சரியான மொழிபெயர்ப்பு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுக்கு அரபி தெரியாத காரணத்தினால் தான் இப்படி தவறாக மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்று வாதிடும் இந்த அரபி புலவர்களுக்கு ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புகாரியின் மொழியாக்கத்தையே இங்கு பார்வைக்குத் தருகின்றோம்.
– لَيْلَةِ أُسْرِيَ بِالنَّبِِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الكَعْبَةِ: « سَِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَُدِّثُنَا عَنْ جَاءَهُ ثَلاَثَةُ نَفَرٍ، قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ، وَهُوَ نَائِمٌ فِ مَسْجِدِ الحَرَامِ، فَقَالَ أَوَّلُُمْ: أَيُّهُمْ هُوَ؟ فَقَالَ أَوْسَطُهُمْ: هُوَ خَيُْهُمْ، وَقَالَ آخِرُهُمْ: خُذُوا خَيَْهُمْ. فَكَانَتْ تِلْكَ، فَلَمْ يَرَهُمْ حَتَّى جَاءُوا لَيْلَةً أُخْرَى فِيمَا يَرَى قَلْبُهُ، وَالنَّبُِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَائِمَةٌ عَيْنَاهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ، وَكَذَلِكَ الأَنْبِيَاءُ “ تَنَامُ أَعْيُنُهُمْ وَلاَ تَنَامُ قُلُوبُهُمْ، فَتَوَلَّهُ جِبِْيلُ ثُمَّ عَرَجَ بِهِ إِلَ السَّمَاءِ
அப்துல்லாஹ் பின் அபீ நமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார்.
அவர்களில் நடுவிலிருந்தவர், “இவர்களில் சிறந்தவர்” என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், “இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்” என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில் – (உறக்க நிலையில்) – அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்: அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத் தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்: அவர்களுடைய உள்ளங்கள் உறங்கமாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.
புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல இஸ்லாமிய ஆதார நூல்களை தமிழ் மொழியில் வெளியிட்டு வரும் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புகாரி தமிழாக்கத்திலும் குறித்த ஹதீஸூக்கு நாம் செய்ய மொழியாக்கத்தையே செய்துள்ளார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் மாத்திரம் தான் இப்படி செய்தது என்று நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டும் இவர்கள் ரஹ்மத் அறக்கட்டளையின் மொழியாக்கத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர்களும்
(லைலதன் உஹ்ரா) என்பதற்கு அடுத்த இரவில் என்றுதான் மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதை நாம் இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.