27) முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா?
முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா?
கேள்வி: என்னுடன் பணியாற்றும் பிப்பைன்ஸ் கிறிஸ்தவ நண்பர்கள் (1) இயேசு திரும்பிவருவார்; முஹம்மது வர மாட்டார் எனவும் (2) இயேசு இறைவனுடன் (மகனாக)இருக்கின்றார்; உங்கள் முஹம்மது ஏன் மரணித்தார்? இயேசு போல் ஏன் மேலேசெல்லவில்லை? எனவே இயேசு இறைவனின் மகன். அவரும் எங்கள் கடவுள் என்றுகூறுகின்றனர். இவர்களுக்கு எவ்வாறு விளக்கம் தரலாம்.
– ஜெ. அபூபக்கர், ஜித்தா.
பதில்: தந்தையின்றி அவர் பிறந்தது, இன்றளவும் உயிருடன் இருப்பது போன்றகாரணங்களைக் கூறித் தான் இயேசுவை இறை மகன் என்று நம்புகின்றனர்.
ஆனால் இந்தத் தன்மைகள் இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கும் இருந்ததாக பைபிளேகூறுகிறது.
கடவுளுக்கு என்று சில தன்மைகள் அவசியம் என்று பைபிள் கூறுகிறது. அதே பைபிள்இயேசுவிடம் அந்தத் தன்மைகள் இல்லை எனக் கூறுகிறது.
இது போன்ற வசனங்களை நீங்கள் எடுத்துக்காட்ட வேண்டும்.
யாத்திராகமம் 4:22➚, சங்கீதம் 2:7➚, இரண்டாம் சாமுவேல் 7:14➚, எரேமியா 31:9➚, சங்கீதம் 68:5➚, உபாகமம் 14:1➚, மத்தேயு 6:14➚,15, 5:9➚, 23:9➚, லூக்கா 6:35➚, அப்போஸ்தலர் 17:29➚, ரோமர் 8:16➚ ஆகிய வசனங்களில் இயேசு மட்டுமின்றி இன்னும் பலரும், முழுமனித சமுதாயமும்கடவுளின் குமாரர்கள் என்று கூறப்படுகின்றது.
இதிலிருந்து குமாரன் என்பது எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைஅறியலாம்.
மத்தேயு 8:20➚, 9:6➚, 9:8➚, 16:13➚, 16:27➚, 17:12➚, 17:22➚, 19:28➚, 20:18➚, 20:28➚, 26:24➚, 26:45➚ ஆகியவசனங்கள் இயேசு மனுஷ குமாரன் தான் என்று பிரகடனம் செய்கின்றன.
லூக்கா 3:38➚, ஆதியாகமம் 2:21➚,22, எபிரேயர் 7:3➚,4 ஆகிய வசனங்களில் இன்னும் பலரும்இயேசுவைப் போல தந்தையின்றி பிறந்ததாக பைபிள் கூறுகிறது.
ஆதியாகமம் 5:24➚, எபிரேயர் 11:5➚, இரண்டாம் ராஜாக்கள் 2:11➚ ஆகிய வசனங்கள்இயேசுவைப் போலவே வேறு சிலரும் இன்று வரை உயிருடன் இருப்பதாகக்கூறுகின்றன.
எசக்கியேல் 28:9➚, சங்கீதம் 121:4➚, மத்தேயு 3:13➚, 4:1➚, 4:12➚, 8:20➚, 8:24➚, 15:17➚, 17:27➚, 19:28➚, 23:33➚, 26:38➚, 26:67➚, 27:29➚, யோவான் 1:18➚, 8:59➚, 13:5➚, 19:28➚, லூக்கா 2:21➚, 11:27➚, 24:38➚, 24:39➚, 24:40➚, 24:42➚, மார்க்கு 14:33➚, 14:34➚ ஆகிய வசனங்களும், இன்னும் பல வசனங்களும் இயேசுவிடம்கடவுள் தன்மை எதுவுமில்லை; அவரிடம் மனிதத் தன்மைகள் தான் முழுக்க முழுக்கஇருந்தன என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகின்றன.
இன்னும் பைபிளின் எண்ணற்ற வசனங்களில் இயேசு கடவுளின் அடிமை தான்; தூதர்தான்; நிச்சயமாக மகனில்லை என்று கூறுகின்றன.
(இயேசு இறை மகனா?’என்ற எமது வெளியீட்டில் இது குறித்து விரிவாக எழுதியுள்ளோம். இந்த நூல் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.)