27) மாடு உழவு செய்வதற்காக மட்டும் தான் படைக்கப்பட்டதா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

27) மாடு உழவு செய்வதற்காக மட்டும் தான் படைக்கப்பட்டதா?

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் இன்னுமோர் பிரதான செய்தியாக இருப்பது மாடு பேசிய செய்தி பற்றிய ஹதீஸாகும். இது பற்றி இங்கு விபரமாகப் பார்ப்போம்.

 (صحيح البخاري)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الَّلِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، – 3471 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الَّلُ عَنْهُ،

قَالَ: صَلَّى رَسُولُ الَّلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلاَةَ الصُّبْحِ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: “ بَيْنَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً إِذْ رَكِبَهَا فَضَرَبَهَا، فَقَالَتْ: إِنَّا لَْ نُْلَقْ لَِذَا، إِنََّا خُلِقْنَا لِلْحَرْثِ “ فَقَالَ النَّاسُ: سُبْحَانَ الَّلِ بَقَرَةٌ تَكَلَّمُ، فَقَالَ: “ فَإِنِّي أُومِنُ بِهَذَا، أَنَا وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، – وَمَا هُمَا ثَمَّ – وَبَيْنَمَا رَجُلٌ فِ غَنَمِهِ إِذْ عَدَا الذِّئْبُ، فَذَهَبَ مِنْهَا بِشَاةٍ، فَطَلَبَ حَتَّى كَأَنَّهُ اسْتَنْقَذَهَا مِنْهُ، فَقَالَ لَهُ الذِّئْبُ هَذَا: اسْتَنْقَذْتَهَا مِنِّ، فَمَنْ لََا يَوْمَ السَّبُعِ، يَوْمَ لاَ رَاعِيَ لََا غَيِْي “ فَقَالَ النَّاسُ: سُبْحَانَ الَّلِ ذِئْبٌ يَتَكَلَّمُ، قَالَ: “فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، – وَمَا هُمَا ثَمَّ -” ، وحَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِِثْلِهِ

(صحيح البخاري )
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبََنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبََنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ – 3663 الرَّحَْنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ الَّلُ عَنْهُ، قَالَ: سَِعْتُ رَسُولَ الَّلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: “ بَيْنَمَا :

رَاعٍ فِ غَنَمِهِ عَدَا عَلَيْهِ الذِّئْبُ، فَأَخَذَ مِنْهَا شَاةً فَطَلَبَهُ الرَّاعِي، فَالْتَفَتَ إِلَيْهِ الذِّئْبُ فَقَالَ: مَنْ لََا يَوْمَ السَّبُعِ، يَوْمَ لَيْسَ لََا رَاعٍ غَيِْي؟ وَبَيْنَمَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً قَدْ حََلَ عَلَيْهَا، فَالْتَفَتَتْ إِلَيْهِ فَكَلَّمَتْهُ، فَقَالَتْ: إِنِّي لَْ أُخْلَقْ لَِذَا وَلَكِنِّ خُلِقْتُ لِلْحَرْثِ “ قَالَ النَّاسُ: سُبْحَانَ الَّلِ، قَالَ النَّبُِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “فَإِنِّي أُومِنُ بِذَلِكَ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ بْنُ الخَطَّابِ ”رَضِيَ الَّلُ عَنْهُمَا

அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, “(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, “நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்” என்று கூறியது. எனச் சொன்னார்கள்.

மக்கள், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?” என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நானும், அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், “ஒரு மனிதர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக்) கொண்டு சென்று விட்டது.

அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, “இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது” எனச் சொன்னார்கள்.

இதைக் கேட்ட மக்கள், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஓநாய் பேசுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.

(புகாரி: 3471)

அபூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) “ஓர் ஆட்டிடையர் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது ஓநாய் ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விக் கொண்டு சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, “கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக இறுதி) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார்? அந்த நாளில் என்னைத் தவிர இதற்குப் பொறுப்பாளன் எவனுமில்லையே’ என்று கூறியது.

(இவ்வாறே) ஒரு மனிதர் ஒரு மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு அதை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது, அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. “நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்படவில்லை. மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத் தான் படைக்கப்பட்டுள்ளேன்’ என்று அது கூறிற்று” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே மக்கள், “அல்லாஹ் தூயவன்” என்று (வியந்து) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நானும், அபூபக்ரும், உமர் பின் கத்தாபும் இதை (இந்த நிகழ்ச்சிகளை) நம்புகிறோம்” என்று சொன்னார்கள். “அபூபக்ர், உமர் இருவரைக் குறித்தும் அல்லாஹ் திருப்தியடைவானாக!” (என்று அறிவிப்பாளர் பிரார்த்திக்கிறார்.)

(புகாரி: 3663)

மேற்கண்ட செய்திகள் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாடு பேசியதை மறுக்கிறோமா?

குறித்த செய்தியில் மாடு பேசியதாக ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறி நாம் மறுக்கும் போது, மாடு பேசியதை இவர்கள் மறுக்கின்றார்கள் என்ற பாணியில் நமக்கு எதிராக வாதம் வைப்பவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள்.

மேற்கண்ட செய்தியில் மாடு பேசியது என்பதை நாம் மறுக்கவில்லை. இறைவன் நினைத்தால் மாட்டையோ, ஆட்டையோ, யானையையோ கூட பேசவைக்க முடியும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆகவே மேற்கண்ட செய்தியில் மாடு பேசியதா? பேசுமா? என்பது சர்ச்சையே அல்ல. மாடு பேசியதாகக் கூறப்படும் செய்தி விஷயத்தில் தான் சர்ச்சையே எழுகின்றது.

அதிராம்பட்டிணம் விவாதத்தின் போது அல்லாஹ் நாடினால் மாடும் பேசலாம். அந்த அடிப்படையில் நாங்கள் இதை மறுக்கவில்லை அது பேசியதாகக் கூறப்படும் செய்தி குர்ஆனுக்கு முரணாக உள்ளதால் தான் மறுக்கிறோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பதிலளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறோம்.

இது தொடர்பில் விரிவாக ஆராய்வோம்

நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் நபித் தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, முற்காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை விபரித்தார்களாம். அதில் “(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார்.

அப்போது அந்தப் பசுமாடு, “நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்” என்று கூறியது. என நபியவர்கள் சொன்னதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்படுகின்றது.

மேற்கண்ட ஹதீஸில் மாட்டின் மேல் பயணம் செய்தவர் மாட்டை அடிக்கின்றார். அப்போது மாடு அந்த மனிதருடன் பேசுகின்றது. பேசும் போது நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களை சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில் உழுவதற்காகத் தான்” என்று கூறியதாம்.

மாடு இப்படி பேசியாக நம்புவது புனித அல்குர்ஆனின் கருத்துக்கு நேர் முரணானதாகும். ஏனெனில் மாட்டில் பிரயாணம் செய்ய முடியும் என்று இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாக கூறியிருக்கும் போது நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில் உழுவதற்காகத் தான்” என்று கண்டிப்பாக மாடு சொல்லாது. சொல்லவும் முடியாது.

கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். காலையில் ஓட்டிச் செல்லும் போதும், மாலையில் திரும்பும் போதும் அதில் உங்களுக்கு மதிப்பு இருக்கிறது.

பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்: இரக்கமுள்ளவன்.

குதிரைகள், கோவேறுக்கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்.

(அல்குர்ஆன்: 16:05-08)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களில் மனிதர்களுக்காகவே கால்நடைகளை இறைவன் படைத்தாகக் கூறிவிட்டு, உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன” என்று குறிப்பிடுவதின் மூலம், கால்நடைகள் உழவு செய்வதற்காக பயன்படுவதைப் போல சுமைகளைச் சுமந்து செல்வதற்காகவும் பயன்படுகின்றன என்பதை இறைவன் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

நீங்கள் ஏறிச் செல்வதற்காக உங்களுக்குக் கால்நடைகளை அல்லாஹ்வே உருவாக்கினான். அவற்றிலிருந்து உண்ணுகிறீர்கள்.

அவற்றில் உங்களுக்கு (வேறு) பயன்களும் உள்ளன. உங்கள் உள்ளங்களில் உள்ள தேவையை அவற்றின் மீது (ஏறிச் சென்று) அடைந்து கொள்கிறீர்கள். அவற்றின் மீதும், கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்.

(அல்குர்ஆன்: 40:79-80)

கால்நடைகளை இறைவன் படைத்ததின் நோக்கங்களில் ஒன்றாக ஏறிப் பயணம் செய்வதையும் அல்லாஹ் இங்கு தெளிவாகக் குறிப்பிடுகின்றான். அவனே ஜோடிகள் அனைத்தையும் படைத்தான். கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் ஏறிப் பயணம் செய்வதையும் உங்களுக்காக ஏற்படுத்தினான்.

நீங்கள் அதன் முதுகுகளில் ஏறிச் செல்வதற்காகவும், ஏறும் போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், “எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்” என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).

(அல்குர்ஆன்: 43:12-14)

மேலுள்ள வசனத்தில் கால்நடைகளில் ஏறிப் பயணம் செய்வதற்காக அவற்றை படைத்ததாகக் குறிப்பிடும் இறைவன், கால்நடைகளில் நாம் ஏறி அமரும் பகுதியை குறிப்பிடும் போது “அதன் முதுகுகளில் ஏறிச் செல்வதற்காகவும்” என்று தெளிவான வார்த்தையின் மூலம் குறிப்பிடுகின்றான்.

இப்படி குர்ஆனில் பல இடங்களில் கால்நடைகளின் மேல் ஏறிப் பயணம் செய்யலாம் என்பதை இறைவன் தெளிவுபடுத்தியிருக்கும் போது, மாட்டின் மீது ஏறி பயணம் செய்தவரிடம் நாங்கள் உழவு செய்வதற்காகத் தான் படைக்கப்பட்டுள்ளோம். ஏறிப் பயணம் செய்வதற்காக அல்ல என்று மாடு எவ்வாறு சொல்லியிருக்கும்?

அப்படி மாடு சொல்லியது என்று நாம் ஏற்றுக் கொள்வது திருக்குர்ஆனில் தெளிவான கருத்துக்கு நேரடி மாற்றமானதாகும். ஆகவே இந்தச் செய்தியை நபியவர்கள் சொல்லவில்லை என்று முடிவெடுப்பதே ஈமானுக்கு நெருக்கமானதாகும்.

சுமை சுமக்காத கால்நடைகளில் மாடு அடங்குமா?

கால்நடைகளில் சுமப்பவற்றையும், சுமக்காதவற்றையும் (அவன் படைத்தான்). அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 6:142)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக எடுத்துக் கொண்ட சிலர் கால்நடைகளில் சுமப்பவற்றையும், சுமக்காதவற்றையும் இறைவன் படைத்திருக்கின்றான் என்று கூறி சுமக்காத கால்நடைகளில் ஒன்றாக மாடு உள்ளது என வாதிட முற்படுகின்றனர்.

இது முற்றிலும் தவறான, குர்ஆனை சரியாகஜ புரிய மறுப்பவர்களின் கற்பனை சிந்தனையாகும். பொதுவாகவே கால்நடைகள் என்று குர்ஆன் குறிப்பிடுவது ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றைத் தான் என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒரு விதியாகும். ஒட்டகத்தில் பயணம் செய்யலாம் என்றால் மாட்டில் பயணம் செய்வதை யாரும் மறுக்க முடியாது.

இன்னொரு விஷயம் என்னவென்றால் ஆதி காலத்தில் இருந்து இன்றுவரை மாடு என்பது சுமைகளைச் சுமந்து செல்லும் ஒரு கால்நடையாகவே மனிதர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். சுமை சுமக்காத கால்நடைகள் பட்டியலில் மாட்டை யாராவது சேர்த்தால் மாட்டு வண்டிகள் ஓட்டுவது. மாட்டின் மேல் சுமைகளை ஏற்றுவது அனைத்தையும் ஹராம் என்று பத்வா கொடுக்க வேண்டிவரும்.

சுமப்பவை, சுமக்காதவை என்று இரண்டு வகையான கால்நடைகள் உண்டு என்று இறைவன் குறிப்பிடுவதை நடைமுறையில் காலா காலமாக எவை சுமக்கின்றன, எவை சுமக்கவில்லை என்பதை வைத்தே முடிவெடுக்க வேண்டுமே தவிர அதை விடுத்து மாடு இதில் அடங்காது என்று வாதிடுவது மனோ இச்சையாகும். இதனைக் கீழுள்ள திருமறை வசனத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

“இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும், பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

(அல்குர்ஆன்: 6:138)

நபியும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர்

இந்தச் செய்தியை நம்பினார்களா?

மேலே மாடு பேசிய செய்தியை உண்மை என்று வாதிடுவோர். குறித்த செய்தியின் இன்னொரு பகுதியை ஆதாரமாக முன் வைக்கின்றார்கள். அதாவது மாடு இவ்வாறெல்லாம் பேசியது என்பதை நபியவர்கள் நபித்தோழர்களுக்கு விபரித்த நேரத்தில் நபித்தோழர்கள் “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?” என்று (வியந்து போய்க்) கேட்டார்களாம்.

அதற்கு பதிலளித்த நபி (ஸல்) அவர்கள் “நானும், அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்களாம். ஆனால் அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கு இருக்கவில்லை என்று குறித்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.

இதில் “நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று நபியவர்களே கூறியிருக்கும் போது இதனை ஏன் நாம் நம்ப முடியாதா? என்று கேள்வி எழுப்புகின்றார்கள். இது நாம் இந்தச் செய்தி தொடர்பாக என்ன சொல்கின்றோம் என்பதை சரியாகப் புரியாத காரணத்தினால் வைக்கப்படும் வாதமாகும்.

மாடு பேசியதாக வரும் மேற்கண்ட செய்தியை நபி (ஸல்) சொல்லவும் இல்லை, அப்படியொரு சம்பவம் நடக்கவும் இல்லை என்று நாம் கூறும் போது, இதனை நபியும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் நம்பினார்கள் என்று வாதிடுவது முட்டாள்தனமானதாகும்.

இதனை நபியும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் நம்பினார்கள் என்று நபி சொன்னதாக வருவதும் பொய்யானது, நபி (ஸல்) அவர்கள் இப்படே சொல்லவில்லை. நபியின் வாழ்வில் இப்படியொரு சம்பவம் நடைபெறவேயில்லை என்பதே நமது வாதமாகும். இதனைப் புரிந்து கொள்ளாமலேயே இந்த வாதத்தை முன் வைக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுக்கதையை எப்படியாவது நியாயப்படுத்த நினைக்கும் வழிகேடர்கள் சிலர் இன்னமா என்ற அரபி வார்த்தையை வைத்து இலக்கண விளக்கம் கொடுத்து தங்கத் தாங்களே நகைப்புக்கு உள்ளாக்கிக் கொள்கின்றனர். நாம் இந்த செய்திக்குரிய விளக்கத்தை இன்னமா என்பதை வைத்துக் கொடுக்கவில்லை.

ஒருவர் மாட்டின் மீது ஏறிச் சென்ற போது இதற்காக படைக்கப்படவில்லை என்று மாடு கூறிவிட்டு நாங்கள் விவசாயத்துக்குத்தான் படைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறுகிறது. நாங்கள் இதற்காக (சவாரி செய்வதற்காக) படைக்கப்படவில்லை என்று தெளிவாக சொல்லப்பட்டதை வைத்துத்தான் நாம் நமது வாதத்தை முன்வைக்கின்றோமே தவிர, இன்னமா என்ற சொல்லை வைத்து அல்ல.

இதிலிருந்தே இவர்கள் நமக்குப் பதில் சொல்வதாக நினைத்து நிழலுடன் யுத்தம் செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மாடுகள் சுமப்பதற்காக படைக்கப்படவில்லை என்று குறித்த செய்தியில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கூட விளங்காதவர்களாக இவர்கள் உள்ளனர்.