27) பெண்களே உஷார்

நூல்கள்: நாவை பேணுவோம்

பெண்களே உஷார்

இந்த விஷயத்தில் பெண்களை தான் அதிகம் எச்சரிக்க வேண்டியது உள்ளது மிகச்சாதாரணமாய் கெட்ட வார்த்தைகளை சகட்டு மேனிக்கு பொரிந்து தள்ளுகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பெண்களை பார்த்தால் இதை எளிதாக புரிந்து கொள்ளலாம் தண்ணீர் பிடிக்க வரிசையில் காத்திருப்பார்கள். ரொம்ப நேரம்நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும். திடீரென்று வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்படும். அடுத்து கெட்டவார்த்தைகளை உதிர்க்க ஆரம்பிப்பார்கள்.

பிறகு நீயா நானா? ஒரு கை பார்த்திவிடுவோம் என்ற ரேஞ்சுக்கு தரம் தாழ்ந்து பேசத்துவங்கி விடுவார்கள் இத்தோடு பெண்கள் நிறுத்திக் கொள்வதில்லை. காய்கறி வாங்க மார்க்கெட் போனால் அங்கேயும் இதே பிரச்சனைதான் தாங்கள் பெற்றெடுத்த சிறு குழந்தைகள் ஏதேனும் சிறிய தவறை செய்து விட்டால் அப்போ ஆண்களை விட பெண்கள் கச்சேரி ஆரம்பமாகி விடும். இந்த அளவில் பெண்கள் அதிகமதிகம் சபிப்பவர்களாக இருக்கின்றார்கள் தங்களை கட்டுப்படுத்த நெறிப்படுத்த தவறுகின்றனர் எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசைபாடும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று பெண்கள் சமூகமே தான தர்மங்கள் செய்யுங்கள் ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)? எனப் பெண்கள் கேட்டதும். நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள். 

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)

(புகாரி: 3040)