26) கண்களால் கடவுளைக் காண முடியுமா?
கண்களால் கடவுளைக் காண முடியுமா?
இப்போது அப்படிப்பட்ட ஆற்றல்மிகு அந்தக் கடவுளை நமது கண்களால் காண முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்.
இந்த உலகத்தில் நிச்சயமாக யாரும் அந்த இறைவனைக் காண முடியாது. இறந்த பின்னர் ஒரு வாழ்க்கையிருக்கின்றது; இறந்த பின் ஓர் உலகம் இருக்கிறது. அங்கு தான் அந்த இறைவனைப் பார்க்க முடியும் என்று திருக்குர்ஆன் அகில உலகிற்கும் அறிவிக்கின்றது.
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்.
உண்மையான, உங்களையும் இந்த உலகத்தையும் படைத்த ஓர் இறைவனைக் காண வேண்டுமானால் மேற்கண்ட இலக்கணங்களின் அடிப்படையிலேயே கடவுளை நம்பி வணங்க வேண்டும். அப்படி வணங்குபவருக்கு இறந்தபிறகு அமையவிருக்கும் மறுமை வாழ்க்கையில் நிரந்தர சுவனத்தைப் பரிசாகத் தருகின்றான்.
திருக்குர்ஆன் கூறும் இந்த இலக்கணங்களின் அடிப்படையில் கடவுளை வணங்காமல், தங்கள் விருப்பத்திற்குக் கடவுளை உருவாக்கி வணங்கினால் அதுதான் இறைவனுக்கு இணை செயலாகும். இவ்வாறு இணை கற்பிப்பவர்களுக்கு அந்த ஓரிறைவன் மறுமையில் நிரந்தர நரகத்தைக் கூலியாகத் தருகின்றான்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்.