23) கேலி செய்தல்
கேலி செய்தல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களின் உரிமைகள் குறித்து பின் வருமாறு குறிப்பிட்டார்கள்.
உங்களில் ஒருவர் தம் மனைவியை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக படுக்க நேரலாம். (இது முறையா. பிறகு (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து (அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) என் சிரிக்கிறார்? என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)
இஸ்லாமிய மார்க்கத்தில் பிறரை கேலி செய்யும் நோக்கில் சிரிக்கவே கூடாது எனும்போது நம் நாவால் பிறரை கேலி செய்யும் விதமான வார்த்தைகளை உச்சரிப்பதை இஸ்லாம் அறவே அனுமதிக்காது
எந்தவித ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றது ஆனால் ஒருவரை கேலி செய்வது அவரை அவமதித்தாகவே ஆகும். அதுமட்டுமில்லாமல் கேலி செய்கிறேன் என்ற பெயரில் பிறரின் மனதை நோகடிக்கும் விதமான அவரிடம் உள்ள இயற்கையான குறையை அம்பலப்படுத்திவிடுகின்றார். அவரிடம் உள்ள குறையை சுட்டிக்காட்டி பட்டப்பெயர் கூறி அழைக்கின்றார்கள்.
இதனால் கேலி செய்யப்படுபவர் தான் அவமானப்படுத்தப்படுகிறோம் என்றெனண்ணி அனல்புழுவாய் துடிப்பதை காணமுடிகின்றது. இந்த வகையில் கேலி செய்தல் பல்வேறு வகையான தீமைகளுக்கு ஒரு முதியவர் கீழே விழுந்து விட்டால் உடனே சபை அதிரும் அளவு சிரிப்பார்கள் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டால் அப்பவும் அதே கேலி கிண்டல் தான். இதில் வேதனையான விஷயம் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அணிந்திருக்கும் ஆடையைப்பற்றி கேலி செய்கின்றார்கள்.
சில இளைஞர்களின் வணக்க வழிபாடுகளைப்பற்றி இவர் பெரிய அவ்லியா என்பதாக கிண்டல் செய்கின்றார்கள். பலரும் இவர்கள் செய்யும் கேலி கிண்டலுக்கு அஞ்சியே தாங்கள் செய்யும் வணக்க வழிபாடுகளை கைவிடுகின்றார்கள். தங்கள் சபையில் கேலி செய்வதற்கென்றே ஒருவரை வைத்திருப்பார்கள் தங்களுக்கு நேரம் போகவில்லை எனும் போது அவரை பயன்படுத்தி? கொள்வார்கள் இவற்றுக்கெல்லாம் கேலி பேசுபவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.