22) தீமையில் பங்கெடுக்காதீர்

நூல்கள்: நாவை பேணுவோம்

தீமையில் பங்கெடுக்காதீர்

மனிதர்களில் பெரும்பாலோனர் தாங்கள் தீமையை செய்யாவிடிலும் பிறர் செய்கின்ற தீமையைில் பங்கெடுக்க தவறுவதில்லை. பிறர் ஏதேனும் தீமையை செய்தால் அதை ரசித்து ஒருவர் புறம் பேசினால் அதை எத்தனை மணி நேரம் ஆனாலும் பார்க்கின்ற மிக மோசமான மனநிலையில் ஊறித்திழைத்து விட்டனர் காது கொடுத்து கேட்க தயார் ஆணும் பெண்ணும் கட்டிப்புரண்டால் அதை இமை கொட்டாது பார்த்து ரசிக்கவும் தயார் என்கின்றனர் அதே பாணியில் இவர்கள் பரப்பும் அவதூறை இது அவதூறு என்று தெரிந்த பின்னரும் அதை படிப்பதில் சில மக்கள் ஈடுபடுகின்றனர்.

அவதூறை பரப்புவதற்கென்றே உள்ள இணைய தளங்களை இந்த வாரம் என்ன தான் கூறியிருக்கின்றார்கள் என்று பார்ப்போமே என்பது போல வலிந்து படித்து ரசிக்கின்றனர். இது போன்று தீமையை ரசிப்பவர்கள் இருக்கும் வரையிலும் அந்த தீமை மக்களிடையே மென்மேலும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும். இந்த வகையில் அந்த தீமை வளர்வதற்கு இவர்களும் காரணமாக இருப்பதின் மூலம் துணை போகின்றனர்.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்

(அல்குர்ஆன்: 5:2)