21) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-21
21) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-21
நபிமொழி-101
ஃபஜ்ர் தொழுகையின் முன் சுன்னத்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தவையாகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நபிமொழி-102
கைகளை உயர்த்துதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும், தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வலகல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நபிமொழி-103
வரிசைகளைச் சரி செய்யுங்கள்
‘வரிசைகளைச் சரி செய்யுங்கள்! நெருக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்! கழுத்தைக் கவனித்து சரி செய்து கொள்ளுங்கள்! முஹம்மதின் உயிர் எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக ஷைத்தான் வரிசைகளின் இடையில் சிறிய ஆட்டுக் குட்டிகளைப் போல் நுழைவதை நான் காண்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: நஸயீ-806
நபிமொழி-104
இமாமை முந்தினால்…
أَمَا يَخْشَى أَحَدُكُمْ أَوْ لَا يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.