20) முஹம்மது அப்துர் ரஹ்மான்
நூல்கள்:
முஸ்லிம் தீவிரவாதி (?)
20) முஹம்மது அப்துர் ரஹ்மான்
கேரள மாநிலம் கொடுங்களூருக்கு அருகில் உள்ள அழிக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர். அல் அமீன் என்ற பெயரில் வாரம் மும்முறை வெளியான மலையாளப் பத்திரிக்கையின் ஆசிரியர். கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர். நகராட்சி மற்றும் சட்டமன்றங்களில் பலவருடங்கள் உறுப்பினராக இருந்தவர் முஹம்மது அப்துர் ரஹ்மான்.
ஒத்துழையாமை இயக்கம் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது காந்தியின் அழைப்பை ஏற்று தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே நிறுத்தினார். தேசியப் போராட்டத்தில் குதித்தார். அதற்காகப் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.
(வி.போ.மு, வி.என்.சாமி பக் 603)