27) கடவுளுக்கு படிப்படியான வளர்ச்சி உண்டா?
நூல்கள்:
இயேசு இறை மகனா?
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர் மேல் இருந்தது.
(லூக்கா 2:40)
அவருக்குப் பன்னிரண்டு வயதான போது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்
(லூக்கா 2:42)
இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் அதிகரித்து, கடவுளுக்கும் மனுஷனுக்கும் பிரியராக மென்மேலும் வளர்ந்து வந்தார்.
(லூக்கா 2:52)
சாதாரண, சராசரி மனிதனுக்கு உள்ள அத்தனைத் தன்மைகளும், பலவீனங்களும் இயேசுவிடம் இருந்துள்ளன. மனிதர்கள் எப்படிப் பலவீனங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அப்படித் தான் இயேசுவும் இருந்திருக்கிறார் என்பதை பைபிளின் இந்த வசனங்கள் தெளிவாகக் காட்டவில்லையா?