131. 2 நாட்கள் எறிய வேண்டிய கற்களை, ஒரே நாளில் எறியலாமா? எப்படி?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறியவேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம் என்றால், ஒவ்வொரு ஜம்ராவிலும் தலா 14 என தொடர்ந்து ஒரே நேரத்தில் எறிந்துவிடலாமா?
பதில்
மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (திர்மிதீ: 878)
இதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 14 கற்கள் எறிந்து கொள்ளலாம்.