18) ரஃபி அஹமது கித்வாய்
நூல்கள்:
முஸ்லிம் தீவிரவாதி (?)
18) ரஃபி அஹமது கித்வாய்
உத்திரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தின் மாசாலியைச் சேர்ந்தவர் ரஃபி அஹமது கித்வாய். சிறு வயதிலே தாயை இழந்தார். பணி நிமித்தமாக தாய் மாமன் விலாயத் அலியிடம் ஒப்படைத்துவிட்டு தந்தையும் அவரைப் பிரிந்தார். தேசப்பற்று மிக்க மாமனின் வளர்ப்பால் சிறுபருவத்திலே தேசியவாதியாக உருவெடுத்தார்.
மௌலானா முஹம்மதலி நடத்தி வந்த காம்ரேட் ஆங்கிலப் பத்திரிக் கையில் பம்பூக் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதி தேசியக் கனல் வெடிக்கக் காரணமாக இருந்தார். அலிகர் முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் பி.ஏ. முடித்து விட்டு அரசின் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வந்தார். காந்தியின் அறிவிப்பு காதைக் கிழிக்க, கண நேரம் கூட தாமதிக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.
(விடுதலைப் போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி பக் 460)