18) புறம் பேசுவதை தவிர்க்க ஒரு நல்வழி

நூல்கள்: நாவை பேணுவோம்

புறம் பேசுவதை தவிர்க்க ஒரு நல்வழி

பிறர் குறையை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதே புறம் என்று பார்த்தோம். இதனால் கிடைக்கும் தண்டணைகளை நாம் எண்ணிப்பார்த்தாலே இதிலிருந்து விலகிவிடுவோம் என்றாலும் இன்னுமொரு வழியையும் நாம் கடைப்பிடிக்கலாம். பிறரைப்பற்றி ஒரு குறை நமக்கு தெரியவருமாயின் அதை மறைத்து விடவேண்டும். அவ்வாறு மறைத்தால் நமது குறைகளை இறைவன் மறுமையில் மறைத்து விடுகின்றான்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால் அவருளடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: ஆஹுரா (ரலி)

(முஸ்லிம்: 504)

நமது குறைகள் தவறுகள் மறைக்கப்பட வேண்டிய முக்கிய தருணம் மறுமை நாள் தான். இவ்வுலகில் அவைகள் வெளிப்படுத்தப்பட்டால் அதனால் பெரிய விளைவுகள் ஏதும் ஏற்பட போவதில்லை. ஆனால் மறுமை நாளில் நமது குறைகள் வெளிப்படுத்தப்பட்டால் அதை விட வேறு கேவலம் கிடையாது எனவே மறுமையில் நாம் அசிங்கப்படுவதை அவமானப்படுவ தவிர்க்க புறம் பேசுவதை தவிர்த்தே ஆக வேண்டும் என்பாத மனதில் நீக்கமற பதியுங்கள். புறம் என்ற தீய குணம் உங்களை விட்டும் விரண்டோடுவதை நீங்களே உணர்வீர்கள்.