18) நன்மையான காரியங்களில் கூட்டாக செயல்படுங்கள்
18) நன்மையான காரியங்களில் கூட்டாக செயல்படுங்கள்
மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன அண்டைவீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் அவைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டைவீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்லவேண்டும் நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரிங்களில் கூட்டாக செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறைவஷத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார். ஒரு நாள் நான் செல்வேன்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல்கள்:(புகாரி: 89),(முஸ்லிம்: 2951)
திருக்குர்ஆன் அறிவுரைகள், நபிகளாரின் விளக்கங்களை முறைவைத்து கற்று நபித்தோழர்களைப் போல் அண்டைவீட்டார்கள் சேர்ந்து போக முடியாத நேரங்களில் ஒருவர் சென்று நல்ல செய்திகளை கேட்டறிந்து தம் அண்டைவீட்டாருக்கும் எடுத்துச் சொல்லி நன்மையில் கூட்டாகவேண்டும்.