18) வஸீலா ஓர் விளக்கம்
பாடம் 17
வஸீலா ஓர் விளக்கம்
வஸீலா என்றால் என்ன?
”எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் வஸீலா என்று கூறப்படும்”. அதாவது தமிழில் ”துணைசாதனம்” என்று கூறலாம். கடல் பயணம் செய்வதற்கு கப்பல் வஸீலாவாக அதாவது துணைசாதனமாக உள்ளது என்று கூறுவர்.
அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் அனைத்து முஃமின்களும் வஸீலா தேடவேண்டும் என்று கட்டளைபிறப்பித்துள்ளான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
நாம் எதன் மூலம் வஸீலா தேட வேண்டும்?
நாம் நல்லறங்களின் மூலமாக மட்டும்தான் அல்லாஹ்விடம் வஸீலா தேடவேண்டும். பின்வரும் ஆதாரங்களிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன் மடங்கு கூ இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.
பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!. (அல்குர்ஆன்: 2:45) ➚
وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.
நபி (ஸல்) அவர்கள் தனது நேசத்திற்குரிய மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒரு துஆவை கற்றுக் கொடுக்கிறார்கள். அதில்
”அல்லாஹ்வே, நான் உன்னிடத்ததில் சொர்க்கத்தையும், அதன் பக்கம் என்னை நெருக்கமாக்கி வைக்கக் கூடிய நல்லறங்களையும், நல்ல வார்த்தைகளையும் கேட்கிறேன்”,. என கேட்குமாறு சொல்க் கொடுக்கிறார்கள்.
நூல் (அஹ்மத்: 23870)
நல்லறங்கள் மூலம்தான் வஸீலா தேட வேண்டும் என்பதற்கு வயுறுத்தும் சான்றுகள் என்ன?
பல்வேறு ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியதாக நல்லறங்களைத்தான் கூறியிருக்கிறாôகள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
- குகைக்குள் மூன்று நபர்கள் சிக்கிக் கொண்ட போது அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த நல்லறங்களின் மூலமாகத்தான் இறைவனுடைய உதவியைக் கோருகின்றார்கள்.
2272- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : انْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى أَوَوُا الْمَبِيتَ إِلَى غَارٍ فَدَخَلُوهُ فَانْحَدَرَتْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهِمُ الْغَارَ فَقَالُوا إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلاَّ أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ فَقَالَ رَجُلٌ مِنْهُمُ اللَّهُمَّ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَكُنْتُ لاَ أَغْبِقُ قَبْلَهُمَا أَهْلاً ، وَلاَ مَالاً فَنَأَى بِي فِي طَلَبِ شَيْءٍ يَوْمًا فَلَمْ أُرِحْ عَلَيْهِمَا حَتَّى نَامَا فَحَلَبْتُ لَهُمَا غَبُوقَهُمَا فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ وَكَرِهْتُ أَنْ أَغْبِقَ قَبْلَهُمَا أَهْلاً ، أَوْ مَالاً فَلَبِثْتُ وَالْقَدَحُ عَلَى يَدَيَّ أَنْتَظِرُ اسْتِيقَاظَهُمَا حَتَّى بَرَقَ الْفَجْرُ فَاسْتَيْقَظَا فَشَرِبَا غَبُوقَهُمَا اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَةِ فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيعُونَ الْخُرُوجَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ الآخَرُ اللَّهُمَّ كَانَتْ لِي بِنْتُ عَمٍّ كَانَتْ أَحَبَّ النَّاسِ إِلَيَّ فَأَرَدْتُهَا عَنْ نَفْسِهَا فَامْتَنَعَتْ مِنِّي حَتَّى أَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِينَ فَجَاءَتْنِي فَأَعْطَيْتُهَا عِشْرِينَ وَمِئَةَ دِينَارٍ عَلَى أَنْ تُخَلِّيَ بَيْنِي وَبَيْنَ نَفْسِهَا فَفَعَلَتْ حَتَّى إِذَا قَدَرْتُ عَلَيْهَا قَالَتْ لاَ أُحِلُّ لَكَ أَنْ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ فَتَحَرَّجْتُ مِنَ الْوُقُوعِ عَلَيْهَا فَانْصَرَفْتُ عَنْهَا وَهْيَ أَحَبُّ النَّاسِ إِلَيَّ وَتَرَكْتُ الذَّهَبَ الَّذِي أَعْطَيْتُهَا اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجَ عَنَّا مَا نَحْنُ فِيهِ فَانْفَرَجَتِ الصَّخْرَةُ غَيْرَ أَنَّهُمْ لاَ يَسْتَطِيعُونَ الْخُرُوجَ مِنْهَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ الثَّالِثُ اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أُجَرَاءَ فَأَعْطَيْتُهُمْ أَجْرَهُمْغَيْرَ رَجُلٍ وَاحِدٍ تَرَكَ الَّذِي لَهُ وَذَهَبَ فَثَمَّرْتُ أَجْرَهُ حَتَّى كَثُرَتْ مِنْهُ الأَمْوَالُ فَجَاءَنِي بَعْدَ حِينٍ فَقَالَ يَا عَبْدَ اللهِ أَدِّ إِلَيَّ أَجْرِي فَقُلْتُ لَهُ كُلُّ مَا تَرَى مِنْ أَجْرِكَ مِنَ الإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ وَالرَّقِيقِ فَقَالَ يَا عَبْدَ اللهِ لاَ تَسْتَهْزِئْ بِي فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ فَأَخَذَهُ كُلَّهُ فَاسْتَاقَهُ فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا اللَّهُمَّ فَإِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ فَانْفَرَجَتِ الصَّخْرَةُ فَخَرَجُوا يَمْشُونَ.
பார்க்க (புகாரி: 2272)
- ஜூம்ஆத் தொழுகைக்கு வருபவர்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, முதல் நேரத்தில் வருபவர் ஒட்டகத்தை நெருக்கமாக்கியர் போன்றவராவார். இரண்டாவது நேரத்தில் வருபவர் மாட்டையும் மூன்றாவது நேரத்தில் வருபவர் கொம்புள்ள ஆட்டையும் நான்காவது நேரத்தில் வருபவர் கோழியையும் ஐந்தாவது நேரத்தில் வருபவர் முட்டையையும் நெருக்கமாக்கியவர் போன்றவராவார் என்று கூறியுள்ளார்கள்
881- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ
பார்க்க (புகாரி: 881).
அதாவது ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை இவற்றைத் தர்மம் செய்து அதன் மூலம் இறைநெருக்கத்தைத் தேடியவர் போன்றவராவார்.
இந்த செய்தியிலும் தர்மம் செய்தல், ஜூம்ஆவிற்கு வருதல் போன்ற நல்லறங்கள் தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய காரியங்களாக கூறப்படுகிறது.
3.இரவு நேரங்களில் நின்று தொழுவது அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாகும்.
மேற்கண்ட ஹதீஸிலும் நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை என்ற நல்லறத்தைத்தான் இறைநெருக்கத்திற்குரியதாக கூறுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸ்களிருந்து நாம் நல்லறங்கள்தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய ”வஸீலா” துணைசாதனம் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
மகான்களை இடைத்தரகராகக் கொண்டு வஸீலா தேடுவது கூடுமா?
நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை, எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை, எந்தத் தீமையிருந்தும் விலகத் தேவையில்லை, ஏதாவது ஒரு மகானை பிடித்துக் கொண்டால் போதும் கடவுளை நெருங்கிடலாம் என்ற நம்பிக்கை உலகில் உள்ள பலமதங்களில் இருக்கிறது.
ஆனால் இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலா என்ற துணைசாதனத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்றுதான் நபி (ஸல்) கற்றுத் தந்துள்ளார்கள்.
நாம் செய்யக் கூடிய நல்லறங்களும், நல்ல வார்த்தைகளும்தான் நம்மை சுவர்க்கத்தின் பக்கம் அதாவது இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியவை ஆகும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நேசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ர) அவர்களுக்கு அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கும் நல்ல செயல்களை அல்லாஹ்விடம் கேட்குமாறு கற்றுக்கொடுக்கிறார்கள்.
அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி(ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்ளவில்லை. இதிருந்தே இறந்துவிட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களை வஸீலாவாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.