16) பனூஇஸ்ராயீல் மக்ககளுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட அந்த மாட்டின் தன்மை என்ன?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

17) பனூஇஸ்ராயீல் மக்ககளுக்கு அல்லாஹ்

கட்டளையிட்ட அந்த மாட்டின் தன்மை என்ன?

கேள்வி : 

மாட்டை அறுக்குமாறு பனூஇஸ்ராயீல் மக்ககளுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட அந்த மாட்டின் தன்மை என்ன?

பதில் : 

  • கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு
  • பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு

ஆதாரம்

68. “உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்” என்று அவர்கள் கேட்டனர். “அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!” என்று அவர் கூறினார்.

69. “உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்” என்று அவர்கள் கேட்டனர். “அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்” என்றார்.

70. “உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்” என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 2:68-70)