137) நல்ல கொள்கைக்கும், தீய கொள்கைக்கும் இறைவன் கூறும் உதாரணம்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
நல்ல கொள்கைக்கும் தீய கொள்கைக்கும் இறைவன் கூறும் உதாரணம் என்ன?
பதில் :
24. நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.
25. தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.
26. தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப்பட்டுள்ளது; அது நிற்காது.