165) சபா அரசியுடன் சுலைமான் நபியின் நிகழ்வு என்ன?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

சபா அரசியுடன் சுலைமான் நபியின் நிகழ்வு என்ன?

பதில் : 

قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اِنِّىْۤ اُلْقِىَ اِلَىَّ كِتٰبٌ كَرِيْمٌ‏

29. “பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க  கடிதம்போடப்பட்டுள்ளது”“ என்று அவள் கூறினாள்.

اَلَّا تَعْلُوْا عَلَىَّ وَاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏

30, 31. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! (என்று அதில் உள்ளது.)

قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِىْ فِىْۤ اَمْرِىْ‌ۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰى تَشْهَدُوْنِ‏

32. “சபையோர்களே! என் விஷயமாக முடிவு கூறுங்கள்!நீங்கள் ஆலோசனை கூறாதவரையில் நான் எந்தக்காரியத்தையும் முடிவு செய்பவளாக இல்லை” என்றுஅவள்கூறினாள்.

قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِيْدٍ ۙ وَّالْاَمْرُ اِلَيْكِ فَانْظُرِىْ مَاذَا تَاْمُرِيْنَ‏

33. “நாம் வலிமை மிக்கோராகவும், கடுமையாகப் போரிடும் திறன் உடையோராகவும் இருக்கிறோம். அதிகாரம் உம்மிடமே உள்ளது. எனவே என்ன கட்டளையிடுவது என்பதை யோசித்து முடிவெடுப்பீராக!”“ என்று (சபையோர்) கூறினர்.

وَاِنِّىْ مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌۢ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ‏

34, 35. “மன்னர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதைப் பாழாக்குவார்கள். அவ்வூராரில் மதிப்புமிக்கவர்களை இழிந்தோராக ஆக்குவார்கள்.  இப்படித் தான் செய்வார்கள். நான் அவர்களிடம் ஒரு அன்பளிப்பை அனுப்புகிறேன். அனுப்பப்பட்டோர் என்ன முடிவுடன்  திரும்புகிறார்கள் என கவனிக்கப்போகிறேன்”“ என்றும் கூறினாள்.

فَلَمَّا جَآءَ سُلَيْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ فَمَاۤ اٰتٰٮنِۦَ اللّٰهُ خَيْرٌ مِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚ بَلْ اَنْـتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُوْنَ‏

36. ஸுலைமானிடம் (தூதுவர்) வந்தபோது “செல்வத்தால் எனக்கு உதவுகிறீர்களா?அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதைவிட எனக்கு வழங்கியதுசிறந்தது. மாறாக உங்கள் அன்பளிப்பில் நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்!”“ என்றார்.

اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَاْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَـنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ‏

37. “அவர்களிடம் திரும்பிச் செல்வீராக! அவர்கள் எதிர்க்கமுடியாத படைகளுடன் அவர்களிடம் வருவோம். சிறுமைப்பட்டு, இழிந்தோராக அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவோம்”“ (என்றும்கூறினார்).

قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏

38. “பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம்  வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?”“ என்று (ஸுலைமான்) கேட்டார்.

قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ‌ۚ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ‏

39. “உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்”“ என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.

قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏

40.கண் மூடித்திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவைகளற்றவன்; கண்ணியமிக்கவன். 

قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَـنْظُرْ اَتَهْتَدِىْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ‏

41. “அவளது சிம்மாசனத்தை அடையாளம் தெரியாமல் மாற்றுங்கள்! அவள் கண்டுபிடிக்கிறாளா? கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப் பார்ப்போம்”“ என்றார்.

فَلَمَّا جَآءَتْ قِيْلَ اَهٰكَذَا عَرْشُكِ‌ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ‌ۚ وَاُوْتِيْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَ كُنَّا مُسْلِمِيْنَ‏

42. அவள் வந்த போது “உனது சிம்மாசனம் இப்படித் தான் இருக்குமா?”“ என்று கேட்கப்பட்ட து. “அது போல் தான் இருக்கிறது”“ என்று அவள் கூறினாள். “இவளுக்கு முன்பே நாங்கள் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம்”“ (என்று ஸுலைமான் கூறினார்).

وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِيْنَ‏

43. அவள் (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்து அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக்கொண்டிருந்தது (ஒரே இறைவனைநம்புவதைவிட்டும்) அவளைத் தடுத்தது.

قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَ‌ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَـتْهُ لُـجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَا ‌ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ۙ‌قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏

44. “இம்மாளிகையில் நுழைவாயாக!”“ என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த்தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். “அது  பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை”“ என்று அவர் கூறினார். “என் இறைவா நான் எனக்கே தீங்கிழைத்துவிட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டுவிட்டேன்”“ என்று அவள் கூறினாள்.

(அல்குர்ஆன்: 27:29-44)