132) யூசுப் நபி அரசவையில் அளவுப் பாத்திரம் எவ்வாறு காணாமல் போனது?
கேள்வி :
யூசுப் நபி அரசவையில் அளவுப் பாத்திரம் எவ்வாறு காணாமல் போது நடந்த நிகழ்வு என்ன?
பதில் :
70. அவர்களை, அவர்களது சரக்குகளுடன் தயார்படுத்தியபோது அளவுப் பாத்திரத்தைத் தமது சகோதரனின் சுமையில் வைத்தார். பின்னர் “ஒட்டகக் கூட்டத்தாரே! நீங்கள் திருடர்கள்” என்று அறிவிப்பாளர் அறிவித்தார்.
71. இவர்களை நோக்கி வந்த அவர்கள் “எதைத் தொலைத்து விட்டீர்கள்?” என்று கேட்டனர்.
72. “மன்னருக்குரிய அளவுப் பாத்திரத்தை நாங்கள் காணவில்லை. அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகச் சுமை(யளவு தானியம்) உண்டு. நான் அதற்குப் பொறுப்பாளன்” என்றனர்.
73. “நாங்கள் இப்பூமியில் குழப்பம் விளைவிக்க வரவில்லை. நாங்கள் திருடர்களும் அல்லர் என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையாக அறிவீர்கள்” என்று இவர்கள் கூறினர்.
74. “நீங்கள் பொய்யர்களாக இருந்தால் இதற்குரிய தண்டனை என்ன?” என்று அவர்கள் கேட்டனர்.
75. “யாருடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவரே (அவரைப் பிடித்துக் கொள்வதே) அதற்குரிய தண்டனை. நாங்கள் அநீதி இழைத்தோரை இவ்வாறே தண்டிப்போம்” என்று இவர்கள் கூறினர்.
76. அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (யூஸுஃப் சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர் அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம். அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். நாம் நாடியோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்.
77. “இவர் திருடியிருந்தால் இதற்கு முன் இவரது சகோதரரும் திருடியிருக்கிறார்” என்று அவர்கள் கூறினர். (அந்தச் சகோதரன் தானே என்ற விஷயத்தை) யூஸுஃப், அவர்களிடம் வெளிப்படுத்தாமல் தமது மனதுக்குள் வைத்துக் கொண்டார். “நீங்கள் மிகக் கெட்டவர்கள்; நீங்கள் கூறுவதை அல்லாஹ்வே நன்கு அறிவான்” என்றார்.