15) மூஸாவின் சமுதாய மக்களுக்கு செய்த அருட்கொடைகள் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
16) மூஸாவின் சமுதாய மக்களுக்கு செய்த அருட்கொடைகள் என்ன?
கேள்வி :
மூஸாவின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகள் என்ன?
பதில் :
- மரணித்த பின் உயிர்பித்தல்
- மேகத்தை நிழலிடச் செய்தல்
- மன்னு சல்வா எனும் உணவை வானத்திலிருந்து இறக்குதல்
ஆதாரம் :
“மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது. பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம். உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.