129) அரசருக்கு யூசுப் நபி கொடுத்த விளக்கம் என்ன?
கேள்வி :
அரசருக்கு யூசுப் நபி கொடுத்த விளக்கம் என்ன?
பதில் :
47. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். அறுவடை செய்தவற்றை உண்பதற்காக குறைவான அளவைத் தவிர மற்றவற்றைக் கதிர்களுடன் விட்டு வையுங்கள்!
48. இதன் பிறகு பஞ்சமான ஏழு (ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முன்னர் இருப்பு வைத்தவற்றில் சிலவற்றைத் தவிர மற்றவற்றை அவை சாப்பிட்டு விடும்.
49. “இதன் பிறகு மக்களுக்கு மழை பொழியும் ஆண்டு வரும். அந்த ஆண்டில் பழ ரசங்களைப் பிழிவார்கள்” (என்றார்)