124) யூசுபை அப்பெண்கள் பார்த்த போது நடந்த நிகழ்வு என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
பெண்களின் சூழ்ச்சியை கேள்விப்பட்ட அமைச்சரின் மனைவி என்ன செய்தால்? யூசுபை அப்பெண்கள் பார்த்த போது நடந்த நிகழ்வு என்ன?
பதில் :
அப்பெண்களது சூழ்ச்சியைப் பற்றி அவள் கேள்விப்பட்டபோது, அவர்களை அழைத்து வரச் செய்தாள். அவர்களுக்கு விருந்தையும் ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கத்தியையும் கொடுத்தாள். (யூஸுஃபிடம்) “அவர்களை நோக்கிச் செல்” என்று கூறினாள். அவரை அப்பெண்கள் கண்டவுடன், மலைத்துப் போயினர். தமது கைகளையும் வெட்டிக் கொண்டனர். “அல்லாஹ் தூயவன். இவர் மனிதரே இல்லை. இவர் கண்ணியமான வானவர் தவிர வேறில்லை” என்றனர்.