15) முஸ்லிம்கள் பழைமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்?
முஸ்லிம்கள் பழைமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்?
கேள்வி: முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள்தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப் பட்டோர்,தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக்கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் வாய்ஸ் இதழில் ஒருவாசகர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
சாஜிதா ஹுஸைன், சென்னை.
பதில்: முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டால் தான் இஸ்லாத்தின் பால்மற்றவர்கள் கவனத்தைத் திருப்ப மாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகையபிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நரபலியிடுதல், ஜோதிடம் பார்த்தல், விதவை விவாகம் மறுத்தல், பெண் சிசுக்களைக்கொல்லுதல், தீண்டாமையைக் கடைப்பிடித்தல், போன்ற எல்லா விதமான பழமைவாதத்திலிருந்தும் முஸ்லிம்கள் முற்றிலும் விடுபட்டுள்ளனர்.
மாயம், மந்திரம், புரோகிதம் போன்ற பித்தலாட்டங் களிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டசமுதாயமாக முஸ்லிம் கள் வாழ்ந்து வருவது கண்கூடாகத் தெரிந்த பின்பும்பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இஸ்லாம் வளர்ந்து விடக்கூடாதுஎன்ற ஒரே நோக்கம் தான்.
தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் முஸ்லிம்கள் பகைவர்களாகக்கருதுகிறார்கள் என்பதும் தவறாகும்.
பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துத்துவ சிந்தனை இல்லாத மேல் ஜாதி இந்துக்களையேமுஸ்லிம்கள் எதிரிகளாகக் கருதாத போது தங்களைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களைப்பகைவர்களாகக் கருத மாட்டார்கள்.
ஆயினும் சிலரது சதியின் காரணமாக ஒரு சில பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகைமை இருக்கிறது.
இத்தகைய மோதல்கள் குறைவான அளவே உள்ளன என்றாலும் இத்தகைய நிலைமைதாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு பெரிய தடையாக உள்ளது என்பதைமுஸ்லிம்கள் உணர வேண்டும். தங்கள் சுமூகமான நடவடிக்கை மூலம் இத்தகையஎண்ணத்தை நீக்கப் பாடுபட வேண்டும்.