119) ஷுஐப் நபி தன்னுடைய சமுதாய மக்களுக்கு செய்த உபதேசம் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
ஷுஐப் நபி தன்னுடைய சமுதாய மக்களுக்கு செய்த உபதேசம் என்ன?
பதில் :
84. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின்1 வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்” என்றார்.