117) லூத் நபிக்கு வானவர்கள் செய்த உபதேசம் என்ன?
கேள்வி :
லூத் நபிக்கு வானவர்கள் செய்த உபதேசம் என்ன? எதற்காக உபதேசம் செய்தார்கள்? லூத் நபியின் குடும்பத்தாருக்கு வேதனை வந்ததா?
பதில் :
“லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது.
உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக!
உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும்.
அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்று தூதர்கள் கூறினார்கள்.