113) நூஹ் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நூஹ் நபி கொடுத்த மறுப்பு என்ன?
கேள்வி :
நூஹ் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நூஹ் நபி கொடுத்த மறுப்பு என்ன?
பதில் :
28. “என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்களுக்கு நாங்கள் அதை வற்புறுத்த முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று (நூஹ்) கேட்டார்.
29. “என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்”
30.”என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க மாட்டீர்களா?”
31. “என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்” (எனவும் கூறினார்.)