14) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-14
14) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-14
நபிமொழி-66
தற்கொலை செய்பவருக்குரிய தண்டனை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்தவன் நரகத்திலும் தனது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பான். ஆயுதத்தால் தாக்கித் தற்கொலை செய்தவன் நரகத்திலும் தன்னை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நபிமொழி-67
நபி மீது பொய்யுரைப்பது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது பொய் சொல்லாதீர்கள். என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நபிமொழி-68
உருவ படங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உருவங்களைப் படைக்கும் அனைவருக்கும் நரகமே. அவன் படைத்த ஒவ்வோர் உருவத்திற்கும் அல்லாஹ் உயிர் கொடுப்பான். அந்த உருவம் அவனை நரகத்தில் வேதனை செய்யும்” என்றார்கள். “நீ வரைய வேண்டுமென்றால் மரங்கள், உயிரற்றவற்றின் படங்களை வரைந்துகொள்” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்லிம்: 4290),(புகாரி: 2225)
நபிமொழி-69
பெண்களே! அதிகம் தர்மம் செயுங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெண்களே! தர்மம் செய்யுங்கள். நரகவாசிகளில் நீங்களே அதிகமாக எனக்குக் காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே அது ஏன்” எனப் பெண்கள் கேட்ட போது, “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மன உறுதியிலும், அறிவிலும் சிறந்த ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்திலும் குறையுடைய நீங்கள் குழப்பி விடுவதை காண்கின்றேன்” என்று கூறினார்கள்.
அப்பெண்கள் மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதி இல்லையா” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம்” என்றனர். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “அது அறிவில் அவளது குறையாகும்; மாதவிடாய் ஏற்படும் பெண் தொழுவதில்லை, நோன்பு நோற்பதில்லை அல்லவா என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் ‘ஆம்” என்றனர். நபியவர்கள் அது மார்க்கத்தில் அவளது குறையாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)
நபிமொழி-70
நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சும் பழத் துண்டை தர்மமாகி கொடுத்தாவது நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: அதி பின் ஹாத்திம் (ரலி)