106)இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதி என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதி என்ன?
பதில் :
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் பகுதியில் ஆறுகள் ஓடும்.
ஆதாரம் :
72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.