12) மரப்பலகை அடித்தல்

நூல்கள்: அண்டை வீட்டார் உரிமைகள்

12) மரப்பலகை அடித்தல்

பக்கத்து வீடு என்று வரும்போது அவர்கள் வீட்டை கட்டும் போது அல்லது வீட்டை மரக்கட்டைகள் போன்றவற்றை அண்டைவீட்டாரின் சுவற்றில் பதிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் போது அண்டைவீட்டாருக்கிடையில் பெரிய சண்டைகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

நபிகளார் அவர்கள் இது போன்று நிலைகள் வரும் போது அண்டைவீட்டாருக்கு மரப்பலகைகள் போன்றவற்றை தமது சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதை தடுக்கக்கூடாது என்றும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لاَ يَمْنَعْ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: «مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ، وَاللَّهِ لَأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ»

ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்கவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு என்ன இது உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்போன் அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அஃரஜ்

நூல்கள்:(புகாரி: 2463),(முஸ்லிம்: 3288)