12) குற்றவியல் சட்டங்கள்

நூல்கள்: மத்ஹபுகள்

குற்றவியல் சட்டங்கள்

திருட்டை ஊக்குவிக்கும் மத்ஹபுகள்

(وَإِنْ) نَقَبَ ثُمَّ (نَاوَلَهُ آخَرَ مِنْ خَارِجِ) الدَّارِ (أَوْ أَدْخَلَ يَدَهُ فِي بَيْتٍ وَأَخَذَ) وَيُسَمَّى اللِّصَّ الظَّرِيفَ. وَلَوْ وَضَعَهُ فِي النَّقْبِ ثُمَّ خَرَجَ وَأَخَذَهُ لَمْ يُقْطَعْ فِي الصَّحِيحِ . الدر المختار

ஒருவன் சுவற்றில் துளை போட்டு உள்ளே சென்று, மற்றொருவன் வீட்டுக்கு வெளியில் இருந்து பொருளை வாங்கினால், அல்லது வீட்டுக்குள் கையை விட்டு எடுத்தால் அவனது கை வெட்டப்படாது. துவாரம் போட்டு உள்ளே சென்று பொருளைத் திருடி அந்தத் துளையில் வைத்து விட்டு பின்னர் வெளியே வந்து அப்பொருளை எடுத்தாலும் அவனது கை வெட்டப்படாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

ஹிதாயா, மப்ஸுத், துஹ்ஃபா உள்ளிட்ட ஹனஃபி மத்ஹப் நூல்களிலும் இந்த அற்புதச் சட்டம் எழுதப்பட்டுள்ளது.

وإذا نقب اللص البيت فدخل فأخذ المال وناوله آخر خارج البيت فلا قطع عليهما -المختصر للقدوري –

) وَإِذَا نَقَبَ اللِّصُّ الْبَيْتَ فَدَخَلَ وَأَخَذَ الْمَالَ وَنَاوَلَهُ آخَرَ خَارِجَ الْبَيْتِ فَلَا قَطْعَ عَلَيْهِمَا) لِأَنَّ الْأَوَّلَ لَمْ يُوجَدْ مِنْهُ الْإِخْرَاجُ لِاعْتِرَاضِ يَدٍ مُعْتَبَرَةٍ عَلَى الْمَالِ قَبْلَ خُرُوجِهِ . وَالثَّانِي لَمْ يُوجَدْ مِنْهُ هَتْكُ الْحِرْزِ فَلَمْ تَتِمَّ السَّرِقَةُ مِنْ كُلِّ وَاحِدٍ . الهداية –

ஒரு வீட்டில் திருடுவதற்காக இரண்டு திருடர்களில் ஒருவன் வீட்டுக்கு உள்ளே சென்று விட்டான். மற்றொருவன் வெளியே நின்று கொள்கிறான். உள்ளே சென்றவன் உள்ளே இருந்து கொண்டே ஒவ்வொரு பொருளாக வெளியில் இருப்பவனிடம் கொடுக்கிறான். வெளியில் இருப்பவன் வாங்கிக் கொள்கிறான். இவ்வாறு திருடினால் அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.

காரணம் என்ன தெரியுமா? உள்ளே சென்றவன் எந்தப் பொருளையும் எடுத்துக் கொண்டு வெளியே வரவில்லையாம். அதுபோல் வெளியில் இருப்பவன் வெளியே வந்த பொருட்களைத்தான் எடுத்தானே தவிர அவன் உள்ளே நுழையவில்லையாம். அதனால் இருவரும் தண்டிக்கப்படக்கூடாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய குதூரி

உங்கள் வீட்டில் இவ்வாறு யாரேனும் திருடினால் விட்டு விடுவீர்களா? திருட்டை விட இது கொடூரமான செயல் அல்லவா?

இதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் வசனம் எது? நபிமொழி எது? ஒரு ஆதாரமும் இல்லை.

பைத்தியக்காரர்களால் உருவாக்கப்பட்ட இந்த மத்ஹபுகள் தேவையா?

) وَلَا يُقْطَعُ السَّارِقُ مِنْ بَيْتِ الْمَالِ) لِأَنَّهُ مَالُ الْعَامَّةِ وَهُوَ مِنْهُمْ . قَالَ (وَلَا مِنْ مَالٍ لِلسَّارِقِ فِيهِ شَرِكَةٌ) لِمَا قُلْنَا . (الهداية شرح البداية

பைத்துல் மாலிலிருந்து திருடினால் கை வெட்டப்படாது. ஏனென்றால் அது பொதுச் சொத்தாகும். அவனும் பொதுமக்களில் ஒருவன். இவன் பங்குதாரராக உள்ள செல்வத்திலிருந்து திருடினாலும் கைவெட்டப்படாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

இப்படி ஊழல் செய்வதற்கான சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்.? இப்படி ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு நாடாக இருக்குமா?

) وَلَا قَطْعَ عَلَى سَارِقِ الصَّبِيِّ الْحُرِّ وَإِنْ كَانَ عَلَيْهِ حُلِيٌّ) لِأَنَّ الْحُرَّ لَيْسَ بِمَالٍ وَمَا عَلَيْهِ مِنْ الْحُلِيِّ تَبَعٌ لَهُ , وَلِأَنَّهُ يَتَأَوَّلُ فِي أَخْذِهِ الصَّبِيَّ إسْكَاتَهُ أَوْ حَمْلَهُ إلَى مُرْضِعَتِهِ -الهداية شرح البداية –

நகைகள் அணிந்துள்ள குழந்தையை (நகையுடன்) யாரேனும் திருடிச் சென்றால் அவனது கைகளை வெட்டக் கூடாது. ஏனெனில் குழந்தை என்பது செல்வமல்ல. குழந்தையின் மீதுள்ள நகை (அவனை திருடும் போது) அவனோடு தொடர்ந்து செல்கிறது. ஏனெனில் திருடியவன் குழந்தையை அமைதிப்படுத்துவதற்காக அல்லது பாலூட்டுவபளின் பக்கம் தூக்கிச் செல்வதற்காக தூக்கிச் சென்றேன் என வியாக்கியானம் செய்யலாம்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

) لَا) يُقْطَعُ) لَوْ سَرَقَ ضَيْفٌ مِمَّنْ أَضَافَهُ – (الدر المختار

விருந்தாளிகள் மற்றும் அவரோடு சம்பந்தப்பட்டவர்கள் திருடினால் கை வெட்டப்படாது

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முஹ்தார்

) وَلَوْ سَرَقَ شَاةً فَذَبَحَهَا وَأَخْرَجَهَا لَمْ يُقْطَعْ لِأَنَّ السَّرِقَةَ تَمَّتْ عَلَى اللَّحْمِ وَلَا قَطْعَ فِيهِ (الهداية

ஒருவன் ஒரு ஆட்டைத் திருடி அதை (அவ்விடத்திலேயே) அறுத்து பிறகு அதை வெளியே கொண்டுவந்தால் திருட்டுக் குற்றத்திற்காக அவனது கை வெட்டப்படாது. ஏனெனில் மாமிசத்தையே திருடியுள்ளான். மாமிசத்தைத் திருடினால் அதற்காக கையை வெட்டுவது இல்லை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

அயோக்கியர்களுக்கு புகலிடம் அளித்து அவர்களைப் பாதுகாக்கவே மத்ஹபுகள் தோன்றின என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

விபச்சாரத்தை ஊக்குவிக்கும் மத்ஹப்கள்

மரண தண்டனைக்குரிய கடும் குற்றமாக விபச்சாரத்தை இஸ்லாம் கருதுகிறது. விபச்சாரத்தின் பால் நெருங்கக் கூடாது என்று கடுமையான கட்டளைகளையும் பிறப்பித்துள்ளது. ஆனால் மத்ஹபு நூல்கள் விபச்சாரத்தை மென்மையான குற்றமாகச் சித்தரித்து விபச்சாரம் செய்பவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில் சட்டங்களை உருவாக்கியுள்ளன. உதாரணமாகப் பின்வரும் சட்டத்தைப் பாருங்கள்!

رَجُلٌ اسْتَأْجَرَ امْرَأَةً لِيَزْنِيَ بِهَا فَزَنَى بِهَا فَلَا حَدَّ عَلَيْهِمَا فِي قَوْلِ أَبِي حَنِيفَةَ – المبسوط للسرخسي

ஒரு ஆண் விபச்சாரம் செய்வதற்காக ஒரு பெண்ணை வாடகைக்குப் பேசி அவளுடன் விபச்சாரம் செய்தால் அபூஹனீஃபாவின் கருத்துப்படி அவனுக்குத் தண்டனை இல்லை.

நூல்கள் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களான மப்ஸூத், ஃபத்ஹுல் கதீர், கன்ஸுத்தகாயிக்

காசு கொடுக்காமல் ஓசியாக விபச்சாரம் செய்வது தான் கூடாது. காசு கொடுத்து விட்டால் அதற்குத் தண்டனை இல்லை என்று அபூஹனீஃபாவின் பெயரில் இட்டுக்கட்டியுள்ளனர். விபச்சாரம் செய்யும் முஸ்லிம் மன்னர்களையும், பணக்காரர்களையும் காப்பாற்றுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு திருக்குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஆதாரம் உண்டா என்றால் அறவே இல்லை.

இதற்கான ஆதாரம் என்ன தெரியுமா?

திருமணத்தின் போது பெண்ணுக்கு ஆண் மஹர் கொடுக்கிறான். பணம் கொடுத்து விபச்சாரம் செய்வது மஹர் கொடுத்து திருமணம் செய்வது போல் உள்ளதால் இதற்கு விபச்சாரத்துக்கான தண்டனை அளிக்கக் கூடாது.

எவ்வளவு அருமையான ஆய்வு பாருங்கள்!

விபச்சாரம் செய்து ஒருவன் மாட்டிக் கொண்டால் நான் ஓசியில் விபச்சாரம் செய்யவில்லை; அதற்கான கூலியைக் கொடுத்து விட்டுத்தான் விபச்சாரம் செய்தேன் என்று சொன்னால் அவனைத் தண்டிக்க முடியாது. உரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தான் நான் விபச்சாரம் செய்தேன் என்று விபச்சாரம் செய்த பெண் கூறினால் தண்டிக்கப்பட மாட்டாள்.

மஹர் கொடுப்பது மட்டும் தான் திருமணமா?

  • திருமணத்திற்கு பெண்ணின் வலி எனும் பொறுப்பாளன் இருக்க வேண்டும்.
  • சாட்சிகள் இருக்க வேண்டும்.
  • ஊரறிய ஒப்பந்தம் நடைபெற வேண்டும்.
  • இவ்வொப்பந்தத்தினால் அவளது எல்லாச் செலவுகளையும் இவன் ஏற்க வேண்டும்.
  • அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

*அவன் திடீரென்று மரணித்துவிட்டால் அப்பெண் அவனது சொத்துக்களுக்கு வாரிசாவாள்.

என்றெல்லாம் முக்கியமான பல அம்சங்களைக் கொண்டது திருமணம். மஹர் வாங்க ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாவிட்டால் மஹர் வாங்காமலும் திருமணம் செய்யலாம். இப்படி பல அம்சங்கள் திருமணத்தில் அடங்கியுள்ளன. ஆனால் இவர்களின் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள்! விபச்சாரத்தின் போது கூலி கொடுத்து விட்டதால் அது விபச்சாரம் தானா? என்று இவர்களுக்குச் சந்தேகம் வருகிறதாம்! அதனால் தண்டிக்க முடியாதாம்.

இத்தகைய சந்தேகம் மூளைக்குப் பதிலாக மண்டையில் களிமண் இருப்பவர்களுக்குத் தான் வருமே தவிர மூளையுள்ள ஒரு மனிதனுக்குக் கூட வராது. இன்னும் ஒருபடி மேலே போய் பேசுவதென்றால் கூலி இல்லாமல் ஒரு பெண் விபச்சாரம் செய்தால் உணர்ச்சி வசப்பட்டுச் செய்தாள் என்று கருதலாம். கூலிக்குச் செய்தால் அதை ஒரு தொழிலாகச் செய்கிறாள் என்று தான் கருத முடியும்.

விபச்சாரத்தைக் குற்றச் செயல் என்று கருதாத இந்தியா போன்ற பல நாடுகளில் கூலிக்கு விபச்சாரம் செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இந்தச் சாதாரண அறிவு கூட இல்லாதவர்களால் எழுதப்பட்ட நூல்களைத் தான் இவர்கள் சட்ட நூலாக வைத்துள்ளனர்.

மார்க்க அறிவும், இறையச்சமும் உள்ள ஒருவரால் இப்படிக் கூற முடியுமா? தரம் கெட்ட இவர்கள் காட்டிய வழியில் நமது தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை அமைத்துக் கொண்டால் மறுமையில் வெற்றி பெற முடியுமா?

விபச்சாரம் செய்துவிட்டு தப்பிப்பது எப்படி?

விபச்சாரம் என்ற பெரும்பாவம சமுதாயத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இஸ்லாம் இதற்குக் கடுமையான தண்டனையை வழங்குகிறது. ஆனால் மத்ஹபுச் சட்டத்தின் படி விபச்சாரம் செய்யும் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். அதற்கான குறுக்கு வழியை மத்ஹபு நூல்கள் சொல்லித் தருகின்றன.

وَفِي الْبَحْرِ لَوْ ادَّعَى أَنَّهَا زَوْجَتُهُ فَلَا حَدَّ وَإِنْ كَانَتْ زَوْجَةً لِلْغَيْرِ وَلَا يُكَلَّفُ إقَامَةَ الْبَيِّنَةِ- رد المحتار

(விபச்சாரம் செய்யும் போது பிடிபட்டவன் விபச்சாரியை) எவ்வித ஆதாரமும் இல்லாமல் இது எனது மனைவி என்று சொன்னால் அவனுக்குத் தண்டனை இல்லை. அவள் அடுத்தவரின் மனைவியாக இருந்தாலும் சரியே.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முஹ்தார்

விபச்சாரம் செய்யும் போது மாட்டிக் கொண்டு விட்டால் பிரச்சனையே இல்லை. அவளைத் தன் மனைவி என்று சொல்லி விட்டால் போதும். ஹனஃபி மத்ஹபின் படி அவர்களைத் தண்டிக்கக் கூடாது. இன்றைக்கு லாட்ஜ்களில் விபச்சாரம் செய்து போலீஸில் மாட்டிக் கொள்ளும் போது, ரெடிமேட் தாலியைக் காட்டி, இவள் என் மனைவி என்று கூறுகின்றார்களே! ஹனஃபி மத்ஹபின் இந்தத் தந்திரத்தைத் தான் அவர்கள் கையாள்கின்றார்களோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.

ஊமையைச் சீரழித்தால் தண்டனை இல்லை

لو زَنَى بِامْرَأَةٍ خَرْسَاءَ لَا حَدَّ على وَاحِدٍ مِنْهُمَا البحر الرائق –

ஒருவன் ஓர் ஊமைப் பெண்ணிடம் விபச்சாரம் செய்து விட்டால் இருவரில் எவர் மீதும் தண்டனை இல்லை.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய அல்பஹ்ருர் ராயிக்

قال ولا يؤخذ الأخرس بحد الزنا ولا بشيء من الحدود وإن أقر به بإشارة أو كتابة أو شهدت به عليه شهود وعند الشافعي رحمه الله تعالى يؤخذ بذلك لأنه نفس مخاطبة فهو كالأعمى أو أقطع اليدين أو الرجلين ولكنا نقول إذا أقر به بالإشارة فالإشارة بدل عن العبارة والحد لا يقام بالبدل ولأنه لا بد من التصريح بلفظة الزنا في الإقرار وذلك لا يوجد في إشارة الأخرس إنما الذي يفهم من إشارته الوطء فلو أقر الناطق بهذه العبارة لا يلزمه الحد فكذلك الأخرس وكذلك إن كتب به لأن الكتابة تتردد والكتابة قائمة مقام العبارة والحد لا يقام بمثله وكذلك إن شهدت الشهود عليه بذلك لأنه لو كان ناطقا ربما يدعي شبهة تدرأ الحد وليس كل ما يكون في نفسه يقدر على إظهاره بالإشارة فلو أقمنا عليه كان إقامة الحد مع تمكن الشبهة ولا يوجد مثله في الأعمى والأقطع لتمكنه من إظهار دعوى الشبهة المبسوط للسرخسي

(ஊமையல்லாத) ஒருவன் ஓர் ஊமைப் பெண்ணிடம் விபச்சாரம் செய்து விட்டால் அல்லது ஓர் ஊமையானவன், (ஊமையல்லாத) ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்து விட்டால் தண்டனை இல்லை.

தான் விபச்சாரம் செய்ததாக சைகை அல்லது எழுத்து மூலம் ஒப்புக் கொண்டாலும், அல்லது விபச்சாரம் செய்ததாக சாட்சிகள் அவனுக்கு எதிராக சாட்சி சொன்னாலும் விபச்சாரத் தண்டனை கொண்டோ மற்ற தண்டனைகளைக் கொண்டோ அவன் தண்டிக்கப்பட மாட்டான்.

ஆனால் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள், “அவனுக்குத் தண்டனை வழங்க வேண்டும். காரணம், அவன் குருடன் அல்லது கைநொண்டியை அல்லது கால்நொண்டியைப் போன்று தண்டனை பெறுவதற்குத் தகுதியானவன் தான்” என்று கூறுகின்றார்கள்.

இமாம் ஷாஃபியின் வாதத்திற்கு நாம் அளிக்கும் பதில் இது தான்.

ஊமை தனது குற்றத்தை சைகை மூலம் தான் ஒப்புக் கொள்கிறான். வாக்கு மூலத்திற்குப் பதிலாக வந்து நிற்கும் இந்த சைகையை வைத்துக் கொண்டு இவனைத் தண்டிக்க முடியாது. தண்டனை நிறைவேற்றப்படும் வேளையில் ஒருவன், தான் விபச்சாரம் செய்ததாகத் தெளிவான வாக்குமூலம் அளிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

இது ஊமையின் சைகையில் பெறப்படுவதில்லை. இவனுடைய சைகையின் மூலம் பெறப்படுவது உடலுறவு என்பது மட்டும் தான். எப்படி, வாய் பேசக் கூடிய ஒருவன் கூட இதே வார்த்தையைச் சொல்லி விடுவதால் தண்டனை கடமையாகி விடாதோ அது போல் ஊமையின் சைகை மூலமும் தண்டனை கடமையாகி விடாது. இது போலத் தான் ஊமையின் எழுத்துப்பூர்வமான விண்ணப்பம். ஏனெனில் எழுத்து தடுமாறும். இவ்வாறு வாக்கு மூலத்திற்குப் பதிலாக வந்து நிற்கும் இந்த எழுத்தைக் கொண்டு தண்டனை வழங்கக் கூடாது.

அது போலவே விபச்சாரம் செய்தான் என்று அவனுக்கு எதிராக சாட்சிகள் சாட்சி சொன்னாலும் ஊமை தண்டிக்கப்பட மாட்டான். ஏனெனில் அந்த ஊமை வாய் திறந்து பேசினால் சட்டப்படி தன்னைப் பிடிக்க முடியாத வாதத்தை எடுத்து வைத்து, தன்னைத் தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம் அல்லவா?

அவன் தன்னுடைய மனதில் பட்டதையெல்லாம் சைகை மூலம் வெளிப்படுத்த முடியாதல்லவா? இதன் பின்னரும் நாம் தண்டனை நிறைவேற்றினால், தண்டனையிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அவனுக்கு இருந்தும் அவனை நாம் (முறையற்று) தண்டித்ததாக ஆகி விடும்.

குருடர், நொண்டியின் நிலை இது போன்றதல்ல. காரணம், அவர்களுக்குத் தங்களை தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மப்சூத்

எவ்வளவு கொடூரமாக சிந்தித்து ஆய்வு செய்துள்ளனர் என்று தெரிகிறதா?

மத்ஹப் ஆலிம்சாக்களின் மகளை ஊமை ஒருவன் சீரழித்து விட்டால் அவரால் இந்த ஃபத்வாவை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ள முடியுமா? மத்ஹபைப் பின்பற்றும் ஒருவனது குடும்பத்தில் ஊமைப் பெண்ணுக்கு இது போல் கொடுமை இழைக்கப்படும் போது இந்த பத்வாவைக் கொடுத்தால் அவன் ஏற்றுக் கொள்வானா?

வடிகட்டிய மூடர்களாலும் கொடியவர்களாலும் உருவாக்கப்பட்ட மத்ஹபை தலைமுழுக வேண்டாமா?

சிறுமியைச் சீரழித்தால் தண்டனை இல்லை

பொதுவாகப் பெண்களைச் சீரழிப்பது உலகம் முழுவதும் குற்றமாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வயதுக்கு வராத சிறுமிகளைச் சீரழிப்பது மிகப்பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த மத்ஹப் சட்டத்தைப் பாருங்கள்!

وَإِنْ زَنَى بِصَبِيَّةٍ لَا يُجَامَعُ مِثْلُهَا فَأَفْضَاهَا فَلَا حَدَّ عَلَيْهِ ؛ لِأَنَّ وُجُوبَ حَدِّ الزِّنَا يَعْتَمِدُ كَمَالَ الْفِعْلِ، وَكَمَالُ الْفِعْلِ لَا يَتَحَقَّقُ بِدُونِ كَمَالِ الْمَحَلِّ، فَقَدْ تَبَيَّنَ أَنَّ الْمَحَلَّ لَمْ يَكُنْ مَحَلًّا لِهَذَا الْفِعْلِ حِينَ أَفْضَاهَا بِخِلَافِ مَا إذَا زَنَى بِهَا وَلَمْ يُفْضِهَا ؛ لِأَنَّهُ تَبَيَّنَ أَنَّهَا كَانَتْ مَحَلًّا لِذَلِكَ الْفِعْلِ حِين احْتَمَلَتْ الْجِمَاعَ، وَلِأَنَّ الْحَدَّ مَشْرُوعٌ لِلزَّجْرِ، وَإِنَّمَا يُشْرَعُ الزَّجْرُ فِيمَا يَمِيلُ الطَّبْعُ إلَيْهِ، وَطَبْعُ الْعُقَلَاءِ لَا يَمِيلُ إلَى وَطْءِ الصَّغِيرَةِ الَّتِي لَا تُشْتَهَى وَلَا تَحْتَمِلُ الْجِمَاعَ فَلِهَذَا لَا حَدَّ عَلَيْهِ وَلَكِنَّهُ يُعَزَّرُ لِارْتِكَابِهِ مَا لَا يَحِلُّ لَهُ شَرْعًا – المبسوط

உடலுறவுக்குத் தகுதியில்லாத சிறுமியிடம் ஒருவன் விபச்சாரம் செய்து, உள்ளே செலுத்தி விட்டால் அவனுக்குத் தண்டனை இல்லை. ஏனெனில், முதலாவதாக, விபச்சாரத்திற்கான தண்டனை உறுதி பெறுவது முழுமையான உடலுறவு மூலமாகத் தான். முழுமையான உடலுறவு முழுக்கத் தகுதியான இடத்திலேயே தவிர ஏற்படாது. இரண்டாவதாக, தண்டனை விதியாக்கப்படுவது அச்சுறுத்துவதற்காகவே! அச்சுறுத்தல் என்பது மனித மனம் மையல் கொள்ளும் போது தான் அவசியமாகும். அறிவாளிகளின் மனம், பார்த்தால் ஆசை வராத, உடலுறவுக்குத் தகுதியில்லாத சிறுமியிடம் உடலுறவு கொள்ள விரும்பாது. எனவே சிறுமியிடம் விபச்சாரம் செய்தவனுக்குத் தண்டனை இல்லை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மப்ஸுத்

நிபுணர்கள் என்ற பெயரில் சட்டம் இயற்றும் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்களாகவும், கொடியவர்களாகவும் உள்ளனர் என்பதற்கு இது தக்க சான்றாக உள்ளது.

உடலுறவுக்குத் தகுதியில்லாத சிறுமிக்கு மிகப்பெரும் கொடுமையை இழைத்தவனுக்கு முழு இன்பம் கிடைக்காததால் தண்டனை இல்லை என்று எழுதியவன் மனித இனத்தில் சேர்க்கவே தகுதியற்றவனாவான். இம்மத்ஹபைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு இதுபோல் கொடுமை இழைக்கப்பட்டு இதற்காக தண்டனை இல்லை என்று ஃபத்வா வழங்கினால் அதை அவரால் ஏற்க முடியுமா? சிந்தித்துப் பார்த்து மத்ஹபைத் தூக்கி எறியுங்கள்!

முஸ்லிமல்லாதவருடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை!

விபச்சாரம் கொடிய குற்றமாக இருந்தாலும் முஸ்லிம் ஒருத்தி முஸ்லிமல்லாத ஒருவருடன் விபச்சாரம் செய்வதை மிகக் கடுமையாகக் கருத வேண்டும். ஆனால் முஸ்லிம் பெண்களுடன் முஸ்லிமல்லாதவன் விபச்சாரம் செய்தால் அதற்கான தண்டனை குறித்து மத்ஹப் கூறுவதைப் பாருங்கள்!

وَلَوْ زَنَى حَرْبِيٌّ مُسْتَأْمَنٌ بِمُسْلِمَةٍ أَوْ ذِمِّيَّةٍ لَا يُحَدُّ الْحَرْبِيُّ وَهُوَ كَغَائِبٍ عِنْدَ أَبِي حَنِيفَةَ وَتُحَدُّ الذِّمِّيَّةُ أَوْ الْمُسْلِمَةُ، وَعِنْدَ مُحَمَّدٍ لَا يُحَدَّانِ جَمِيعًا كَمَجْنُونِ زَنَى بِعَاقِلَةٍ وَعِنْدَ أَبِي يُوسُفَ يُحَدَّانِ جَمِيعًا كَذِمِّيٍّ زَنَى بِذِمِّيَّةٍ فَإِنَّهُمَا يُحَدَّانِ جَمِيعًا بِالْإِجْمَاعِ ثُمَّ الْأَصْلُ أَنَّ الْحَدَّ مَتَى سَقَطَ عَنْ أَحَدِ الزَّانِيَيْنِ بِالشُّبْهَةِ سَقَطَ عَنْ الْآخَرِ لِلشَّرِكَةِ كَمَا إذَا ادَّعَى أَحَدُهُمَا النِّكَاحَ، وَالْآخَرُ يُنْكِرُ وَمَتَى سَقَطَ لِقُصُورِ الْفِعْلِ فَإِنْ كَانَ الْقُصُورُ مِنْ جِهَتِهَا سَقَطَ الْحَدُّ عَنْهَا وَلَمْ يَسْقُطْ عَنْ الرَّجُلِ كَمَا إذَا كَانَتْ صَغِيرَةً أَوْ مَجْنُونَةً أَوْ مُكْرَهَةً أَوْ نَائِمَةً وَإِنْ كَانَ الْقُصُورُ مِنْ جِهَتِهِ سَقَطَ عَنْهُمَا جَمِيعًا كَمَا إذَا كَانَ مَجْنُونًا أَوْ صَبِيًّا أَوْ مُكْرَهًا ثُمَّ حَدُّ السَّرِقَةِ، وَالزِّنَا لَا يُقَامُ عَلَى الْمُسْتَأْمَنِ عِنْدَهُمَا.الجوهرة النيرة

لَا يَجِبُ الْحَدُّ بِزِنَا رَجُلٍ حَرْبِيٍّ مُسْتَأْمِنٍ بِذِمِّيَّةٍ فِي حَقِّ الْحَرْبِيِّ الْمُسْتَأْمِنِ وَأَمَّا الذِّمِّيَّةُ فَتُحَدُّ وَهَذَا عِنْدَ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ وَكَذَا لَوْ زَنَى بِمُسْلِمَةٍ تُحَدُّ الْمُسْلِمَةُ دُونَهُ عِنْدَهُ وَعِنْدَ أَبِي يُوسُفَ يُحَدُّ الْمُسْتَأْمِنُ أَيْضًا وَعِنْدَ مُحَمَّدٍ لَا يُحَدُّ وَاحِدٌ مِنْهُمَا- تبيين الحقائق

அபயமளிக்கப்பட்ட எதிரி நாட்டைச் சேர்ந்தவன், அல்லது இஸ்லாமியக் குடியரசின் கீழ் வாழும் பிற மதத்தைச் சேர்ந்தவன் முஸ்லிம் பெண்ணிடம் விபச்சாரம் செய்தால் முஸ்லிம் பெண்ணுக்குத் தான் விபச்சாரத் தண்டனை! அவனுக்குக் கிடையாது என்பது அபூஹனீஃபாவின் கருத்தாகும்.

இருவரில் எவருக்கும் தண்டனை கிடையாது என்பது ஹனஃபி அறிஞர் முஹம்மதின் கருத்தாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மப்ஸுத்

முஸ்லிம் பெண்களுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை என்ற சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம் பெண்களுடன் விபச்சாரம் செய்ய அது ஊக்கமளிக்கும். இருவருக்கும் தண்டனை இல்லை என்றால் அதனால் என்ன விளைவு ஏற்படும்? முஸ்லிம் ஆணுடன் விபச்சாரம் செய்தால் தண்டிக்கப்படுவோம். முஸ்லிமல்லாத ஆணுடன் விபச்சாரம் செய்தால் எந்த தண்டனையும் இல்லை என்று அறியும் போது நல்ல பெண்களும் விபச்சாரத்தை துணிந்து செய்ய ஊக்கமளிக்கும்.

முஸ்லிம்களை அழிக்க நினைக்கும் கூட்டத்தினர் தான் இச்சட்டத்தை இயற்றி இருக்க முடியும். சராசரி முஸ்லிம் கூட இதை இயற்றி இருக்க முடியாது என்று பளிச்சென்று தெரிகிறது.

பிறன் மனைவியை தன் மனைவி என்று கூறினால் தண்டனை இல்லை

பிறர் மனைவியுடன் ஒருவன் விபச்சாரம் செய்து சாட்சிகளுடன் கையும் களவுமாகப் பிடிபட்டாலும் அவன் தண்டனையில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறது என்று மத்ஹப் சட்டங்கள் கூறுகின்றன.

இதோ அந்தச் சட்டத்தைப் பாருங்கள்!

ادَّعَى الزَّانِي أَنَّهَا زَوْجَتُهُ سَقَطَ الْحَدُّ عَنْهُ وَإِنْ) كَانَتْ (زَوْجَةً لِلْغَيْرِ) بِلَا بَيِّنَةٍ- الدر المختار

விபச்சாரம் செய்தவன் அவள் தன் மனைவி என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் வாதிட்டாலும், அவள் மற்றொருவனின் மனைவியாக இருந்தாலும் அவனுக்குத் தண்டனை இல்லை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

وَلَوْ قَالَ هِيَ امْرَأَتِي أَوْ أَمَتِي لَا حَدَّ عَلَيْهِ وَلَا عَلَى الشُّهُودِ. اهـ. وَفِي الْبَحْرِ لَوْ ادَّعَى أَنَّهَا زَوْجَتُهُ فَلَا حَدَّ وَإِنْ كَانَتْ زَوْجَةً لِلْغَيْرِ وَلَا يُكَلَّفُ إقَامَةَ الْبَيِّنَةِ لِلشُّبْهَةِ- الدر المختار

அவள் என் மனைவி என்றோ என் அடிமை என்றோ அவன் கூறினால் அவன் மீதும் தண்டனை இல்லை. அவனுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மீதும் தண்டனை இல்லை. அவள் பிறன் மனைவியாக இருந்தாலும் சரியே. உன் மனைவி என்பதற்கான ஆதாரத்தைக் காட்டு என்று அவனைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இந்தச் சட்டத்தை இயற்றியவர்கள் அறிவாளிகள் என்றோ, இறையச்சமுடையவர்கள் என்றோ கருத முடியுமா?

விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டால் இவள் என் மனைவி என்று சொல்வதன் மூலம் தண்டனையில் இருந்து அவன் தப்பித்துக் கொள்ளலாம். அவள் என் மனைவி தான் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் கேட்காமல் அப்படியே நம்பி அவனை விட்டுவிட வேண்டுமாம். நான்கு சாட்சிகள் இவன் செய்த விபச்சாரத்துக்கு சாட்சி கூறினாலும், அந்தப் பெண் மற்றவனின் மனைவியாக இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாதாம்.

இந்தச் சட்டத்தை உங்கள் மனசாட்சி ஏற்குமா? இப்படி ஒரு சட்டம் இருந்தால் விபச்சாரம் செய்த ஒருவனாவது தண்டிக்கப்படுவானா? மனிதகுலத்தை நாசமாக்குக்கும் மத்ஹபு என்ற நச்சுக் கிருமியை ஒழித்துக்கட்ட வேண்டாமா?