94)சனிக்கிழமைவாசிகளின் வரலாறு நிகழ்ச்சி என்ன?
கேள்வி :
சனிக்கிழமைவாசிகளின் வரலாறு நிகழ்ச்சி என்ன?
பதில் :
163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
164. “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின்போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)” எனக் கூறினர்.
165. கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். குற்றம் புரிந்து வந்ததால் அநீதி இழைத்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம்.
166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறியபோது “இழிந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம்.