93) மூஸாவின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மூஸாவின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்ன?
பதில் :
160. அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்டபோது “உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!’ என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். “உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர்.
அல்குர்ஆன் : 7 – 160