11) ஹராமான பொருள்
ஹராமான பொருள்
அடுத்தவர் பொருளை தவறான முறைûயில் உண்ணுவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். வரதட்சணை பெண்வீட்டாரை நிர்பந்தப்படுத்தி வாங்கப்படும் மோசடி என்பதால் இதுவும் ஹராமான (தடைசெய்யப்பட்ட) பொருளாகும்.
188. உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்!
செல்வத்தை எப்படி சம்பாதித்தாய்? என்று அல்லாஹ் மறுமையில் ஒவ்வொருவரிடமும் கேட்பான். ஆகுமான வழியில் சம்பாதித்தவர்கள் இந்த விசாரணையில் தப்பித்துக்கொள்வர்கள். வரதட்சணை போன்ற ஹராமான முறையில் செல்வத்தை பெற்றவர்கள் இறைவனிடம் மாட்டிக்கொள்வார்கள்.
எதிராக சாட்சி கூறும் பொருள்
வரதட்சணையாக வாங்கப்பட்ட பொருள் அதை வாங்கியவருக்கு எதிராக மறுமை நாளில் சாட்சி சொல்லும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிம், தன்செல்வத்திருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ ## அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்” எனக் கூறினார்கள்.
சுமையாக மாறும் பொருள்
வரதட்சணையாக வாங்கப்படும் பொருள் மறுமை நாளில் அதை வாங்கியவருக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும். உலகத்தில் இதை வாங்காமல் இருந்தால் நன்றாய் இருக்குமே என்று நினைத்து கைசேதப்படும் அளவுக்கு சிறிய பொருள் கூட பெரும் மலையாக மாறி அவனுக்கு சுமையை கொடுக்கும்.
2452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)