11) முக்கடவுள் கொள்கை முற்றிலும் பொய்யே

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்

முக்கடவுள் கொள்கை முற்றிலும் பொய்யே

கிறிஸ்தவ சமுதாயம் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுள் கொள்கையைக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் கொள்கை ஒரு பொய்யான கொள்கை என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது.

 

4:171 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ‌ ؕ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ‌ ؕ اِنْتَهُوْا خَيْرًا لَّـكُمْ‌ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰـهٌ وَّاحِدٌ‌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ‌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا

 

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையால் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள் (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள் (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன்: 4:171) 

 

9:30 وَقَالَتِ الْيَهُوْدُ عُزَيْرُ ۨابْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَى الْمَسِيْحُ ابْنُ اللّٰهِ‌ؕ ذٰ لِكَ قَوْلُهُمْ بِاَ فْوَاهِهِمْ‌ ۚ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ‌ ؕ قَاتَلَهُمُ اللّٰهُ ‌ۚ اَنّٰى يُؤْفَكُوْنَ‏‏

 

உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர். “மஸீஹ் (இயேசு கிறிஸ்து) அல்லாஹ்வின் மகன்” என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன்: 9:30) 

 

10:68 قَالُوْا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا‌ سُبْحٰنَهٗ‌ ؕ هُوَ الْـغَنِىُّ‌ ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍۢ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏

 

“அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் எந்தச் சான்றும் இல்லை. அவன் தூயவன். அவன் தேவைகளற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?

(அல்குர்ஆன்: 10:68) 

பிள்ளைகள் யாருக்கு தேவை? வயது முதிர்ந்த தள்ளாத பருவத்தில் தன்னை தாங்கிப் பிடிப்பதற்காகவும், தான் தேடி வைத்த செல்வத்தை அடுத்தவர் அள்ளிச் சென்றுவிடாமல் தன் பிள்ளையையே அதற்கு வாரிசாக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னை ஒரு மலடன் என்று உலகம் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும் ஒருவனுக்குப் பிள்ளை அவசியம் தேவை. இது மனிதனுக்குரிய பலவீனம். இந்த பலவீனம் கடவுளுக்கு இருந்தால் அவன் கடவுள் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக உலகிற்கு திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது.

இன்று கடவுள் என்றால் தங்களைப் போன்றே கடவுளுக்கு மனைவி, மக்கள் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்கின்றார்கள். கடவுளுக்கு மனைவி இருந்தால் மனைவியும் கடவுளாகி விடுவார். பிள்ளைகளும் கடவுளாகி விடுவார்கள். அதாவது பல கடவுளர்கள் உருவாகி விடுகின்றார்கள். கடவுளுக்குரிய இலக்கணத்தில் ஒன்று அவனுக்கு நிகரோ, இணையோ இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

 

112:1 قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏ 112:2 اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏ 112:3 لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏ 112:4 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ

” அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன்: 112:1-4) 

எப்போது மனைவி, மக்கள் என்று கடவுளுக்கு ஆகிவிடுகின்றார்களோ அப்போது கடவுளுக்கு நிகரும் இணையும் ஏற்பட்டு விடுகின்றது. அதனால் தான் இந்தியாவில் கடவுள் பற்றிக் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு ஆபாசக் கதைகளெல்லாம் உலா வருகின்றன. கடவுளின் மான உறுப்பு கூட ஒரு பெரிய பரிமாணத்தில் வரையப்பட்டும் வடிக்கப்பட்டும் வழிபாடு செய்யப்படுகின்றது.

ஒரு பக்கம் கடவுளுக்கு இணை ஏற்பட்டு விடுகின்றது. இன்னொரு பக்கம் காமம் என்ற தேவை ஏற்பட்டு விடுகின்றது. காமம் ஏற்பட்டதும் அதைத் தணிக்க மனைவி தேவைப்படுகின்றது. பிறரிடம் தேவை ஏற்படுபவன் ஒருபோதும் கடவுளாக முடியாது. இது அத்தனையையும் மேற்கண்ட அத்தியாயம் அழகாக விளக்கிவிடுகின்றது.

கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள், ஆக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் என்று கடவுளின் அதிகாரத்தை முதலமைச்சர் சக அமைச்சர்களுக்கு துறைகளைப் பிரித்துக் கொடுப்பது போன்று பிரித்துக் கொடுக்கின்றார்கள். ஆனால் இறைவனின் அதிகாரம் பங்கிடுவதற்கும் பகிர்வதற்கும் உரிய அதிகாரம் இல்லை. ஆக்கல் என்ற படைக்கும் அதிகாரம் அவன் வசமே இருக்கின்றது.