11) நோன்பு பாழாகும்
நோன்பு பாழாகும்
ஆம். நாம் இது நாள் வரையிலும் பசித்திருந்து தாகித்திருந்து வைத்த நோன்பின் நன்மைகள் அனைத்தும் பாழாகிவிடும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை பாருங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலி
நோன்பின் நோக்கம் நாம் பசியை உணர வேண்டும் ஏழைகள் படும் துயரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதோ இல்லை. மாறாக எல்லா விதத்திலும் பொய்யை விட்டெழிக்க வேண்டும் என்பதே இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் அந்த நோன்பு எதற்கு அதன் நன்மைகளை எப்படி பெற முடியும்? பொய்யான பேச்சும் நடவடிக்கையும் நம்மிடம் தொடருமேயானால் நாம் எத்தனை வருடங்கள் நோன்பு வைத்திருந்தாலும் அதன் நன்மைகளை இறைவனிடம் எதிர்பார்க்க முடியாது. அவைகள் யாவும் பயனற்ற நோன்பாகவே இருக்கும்.