11) தான் மட்டும் வயிராற சப்பிடமாட்டான்
நூல்கள்:
அண்டை வீட்டார் உரிமைகள்
11) தான் மட்டும் வயிராற சப்பிடமாட்டான்
பக்கது வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல் பசியோடு இருக்கும் போது தான் இருக்கும் போது மட்டும் வயிறுபுடைக்க சாப்பிடுவது முஃமினுக்கு அழகல்ல அண்டைவீட்டில் இருப்பவருக்கு வழங்கிவிட்டு சாப்பிடுவதுதான் இறைநம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும்.
وَقَدْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :
لاَ يَشْبَعُ الرَّجُلُ دُونَ جَارِهِ آخِرُ مُسْنَدِ عُمَرَ بْنِ الْخَطَّاب
தன் அண்டைவீட்டானை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : உமர் (ரலி)
(அஹ்மத்: 367)
முஸனத் அபூயஃலா’ என்ற ஹதீஸ் நூலில் அண்டைவீட்டான் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன்! என்று நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது.